​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தான் தலைமறைவாகவில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி

தான் தலைமறைவாகவில்லை என்றும், தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். திருக்கடையூரில் பேசிய அவர், தன்மீது புகார் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை கைது செய்ய தனிப்படை அமைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறினார். முன்னதாக...

இந்திய தேசிய கீதத்தை உணர்ச்சியுடன் பாடிய பாகிஸ்தான் இளைஞர்கள்

அன்பைப் பரவவிட வேண்டும் என்றும், முட்டாள்தனமான போர் தேவையில்லை என்றும் இந்திய தேசிய கீதத்தை உணர்ச்சிப்பூர்வமாக பாடிய பாகிஸ்தான் இளைஞர் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே புதன்கிழமையன்று ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன் இந்திய தேசிய...

ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய, ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ராஜாவின் பேச்சு...

மோசடி அம்பலமாவதற்கு 3 மாதத்திற்கு முன்னரே தப்பி ஓட திட்டமிட்ட நீரவ் மோடி

13,600 கோடி ரூபாய் பஞ்சாப் நேசனல் வங்கிக் கடன் மோசடி அம்பலமாவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, பசிபிக் பெருங்கடல் தீவு நாடான ((Vanuatu)) வனுவாட்டு-வில் குடியுரிமை பெறுவதற்கு நீரவ் மோடி முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. முதலீடுகள் செய்வதன் மூலம் வெளிநாட்டவர் கவுரவ...

முதன் முறையாக வீடியோ வெளியிட்ட மெஹுல் சோக்சி

பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள மெஹுல் சோக்சி, தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள அவர் ஆண்டிகுவா நாட்டில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது...

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. அதை...

மக்களவைத் தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக, பா.ஜ.க. தேசிய செயற்குழு இன்று கூடுகிறது

மக்களவைத் தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக, பாஜகவின் தேசிய செயற்குழு டெல்லியில் இன்று கூடுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தலித் ஆதரவு சட்டங்களை அமல்படுத்தியதுடன் சமூக நீதிக்கான செயல்பாடுகளில் புதிய நிலைப்பாட்டை அண்மையில் எடுத்துள்ளது....

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். கல்வியை வளர்ப்பதில் புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பமும் முக்கியப் பங்காற்ற முடியும் என்று மோடி தெரிவித்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதனை படைத்த ஆசிரியர்களை அவர் சந்தித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டார்....

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீடு, தீர்ப்பு வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் மேல்முறையீட்டுக்குச் சென்றுள்ள நிலையில், தீர்ப்பு வந்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலையில் இருந்து ரசாயனப் பொருட்களை வெளியேற்றும்...

ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வகையில் பைக் ரேஸ் சாகசம் செய்யும் இளைஞர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசியநெடுஞ்சாலையில் இளைஞர்கள் இருவர், ஆபத்தான வகையில் சாகசம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஓசூர் முதல் சூளகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாகவே இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இளைஞர்கள், கூச்சலிட்டவாறு சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்தான...