​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை விதிக்கப்பட்ட வழக்கில் ஆணையை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய சுற்றறிக்கை

2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க விதிக்கப்பட்ட தடையை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக் கோரிய வழக்கில், 2-ஆம் வகுப்பு...

இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம் தெரிவித்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மகளிர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிபதி சொக்கலிங்கம் நூலகம் மற்றும் குளுரூட்டப்பட்ட அரங்கம் திறப்பு...

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பி.இ. பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரி மனு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பி.இ. பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய மனுவுக்கு தமிழக அரசும், டி.என்.பி.எஸ்.சியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 113 இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. டிப்ளமோ தகுதியுடன்...

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தொடரமுடியாது - உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தொடரமுடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் குட் ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளி எந்த...

மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11-வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், மரணம் அடைந்தததைத் தொடர்ந்து 12-வது பீடாதிபதியாக யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டார். அவரது நியமனத்துக்கும், பட்டாபிஷேகத்துக்கும்...

குட்கா விற்பனையை அனுமதிக்க அதிகாரிகள் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் - CBI பரபரப்பு தகவல்

குட்கா முறைகேடு வழக்கில் அதிகாரிகள் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகனின் ஜாமின் மனு இன்று நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரனைக்கு...

குரூப் 2 தேர்வுகளுக்கு கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களையும் அனுமதிக்கக் கோரி மனு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளுக்கு கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களையும் அனுமதிக்கக் கோரும் மனுவுக்கு தமிழக அரசும், தேர்வாணையமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 10 அன்று வெளியிடப்பட்ட குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பாணையில் பட்டபடிப்பு...

நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்படும் - அதிமுக

நெடுஞ்சாலை டெண்டர் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்படும் என அதிமுக தெரிவித்திருக்கிறது... சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் பொன்னையம், சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர், வெள்ளிக்கிழமை...

சென்னை பத்ரியன் தெருவில் சீல் வைக்கப்பட்ட பூ கடைகள் வெள்ளி மாலைக்குள் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பிராட்வே பூக்கடை பத்ரியன் தெரு பூ கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை வெள்ளிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்குள் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு பூச்சந்தை தொடங்கப்பட்ட பின் பத்ரியன் தெரு பூக்கடைகளில் சில்லறை வணிகம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால் மொத்த...

நக்கீரன் இதழின் 35 ஊழியர்களை கைது செய்யக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நக்கீரன் வாரமிருமுறை இதழின் ஊழியர்கள் 35 பேரை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபானி முன் இன்று விசாரணைக்கு வந்தது..  அப்போது, ஆளுநரின் துணை செயலாளர் அளித்த புகாரில் இந்திய தண்டனை...