​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முடிவற்ற போர்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட முடியாது - டிரம்ப்

முடிவற்ற போர்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், குர்து போராளிக் குழு படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் குர்து படைகளை தீவிரவாதக் குழுவாகக்...

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கெவின் மெக்கலின் பதவி விலகினார்

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கெவின் மேக்கலீனன் பதவி விலகுவதாகவும், அந்தப் பொறுப்புக்கு புதிய தலைவர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என்றும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகும்...

சிரியாவில் அமெரிக்க ராணுவ தளத்திற்கு அரணாக இருக்கும் குர்து படைகள் வேதனை

அமெரிக்கர்கள் துரோகம் இழைத்துவிட்டதாக, சிரியாவில் அமெரிக்க ராணுவ தளத்திற்கு அரணாக இருக்கும் குர்து படைகள் வேதனை தெரிவித்துள்ளன. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்க வீரர்களுடன் இணைந்து குர்து படைகள் போரிட்டன. இந்நிலையில், தனது எல்லையோரத்தில் குர்து படைகளின் செல்வாக்கை கட்டுப்படுத்தும்...

அமெரிக்காவுடன் எப்படியாவது வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிவிட சீனா துடிக்கிறது-டிரம்ப்

கஷ்ட காலத்தில் இருக்கும் சீனா, அமெரிக்காவுடன் எப்படியாவது வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிவிட வேண்டும் என துடிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக உடன்பாட்டை எட்டுவது தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இன்று தொடங்குகின்றன. அமெரிக்க வர்த்தக...

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி குர்துப் படை மீது தாக்குதல்

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி சிரியாவில் உள்ள குர்து படையினர் மீது துருக்கி தாக்குதலைத் தொடங்கி உள்ளது. சிரியாவில் இருந்து செயல்படும் குர்து படையினர் அவ்வப்போது துருக்கியிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குர்து படையினருக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இதனிடையே...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அம்பலமாகிறது?

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றிபெற ரஷ்யா உதவியிருப்பது, புலானாய்வு குழு ஒன்றின் விசாரணையில் தெரியவந்திருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. டிரம்ப் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவரே முன்னின்று நடத்திய விசாரணையில் வெளியாகியுள்ள தகவல், அமெரிக்க அரசியலில் அதிர்வலைகளை...

முடிவே இல்லாத போரில் அமெரிக்க படைகள் ஈடுபடுவதை விரும்பவில்லை -அதிபர் டிரம்ப்

பிறநாடுகளில் நடந்துவரும் முடிவே இல்லாத போர்களில் அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவதை விரும்பவில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஒபாமா உத்தரவின்பேரில் அமெரிக்க படைகள்...

வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நல்ல வாய்ப்பாக அமையும் - டிரம்ப்

அமெரிக்கா-சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை, வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வர கடந்த 10 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து...

முன்னாள் துணை அதிபர் பைடன், அவரது மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க டிரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடவுள்ள முன்னாள் துணை அதிபர் பைடன் மற்றும் அவரது மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி சீனா மற்றும் உக்ரைன் நாடுகளை அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள...

வடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை தொடரும் - அமெரிக்க அதிபர்

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருந்தாலும், அந்நாட்டுடன் அணு ஆயுத பேச்சு வார்த்தை நடத்த தங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதை கண்டித்து வடகொரியா அவ்வப்போது குறுகிய...