​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜியோவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது ஏர்டெல் நிறுவனம்

மொபைல் போனில் வேகமான இணையதள சேவை வழங்குவதில் ஜியோவை, ஏர்டெல் நிறுவனம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல்போன் இணைய சேவையின் வேகம் குறைவாக இருந்ததாக, பிராட்பேண்ட் அளவீட்டுக்கான ஓக்லா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜியோவை பின்னுக்குத் தள்ளி பார்தி...

5ஜி ஒப்பந்தங்களில் இருந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வெளியேற முடிவு?

5ஜி தொழில்நுட்ப சேவைக்காக சீனாவின் ஹூவேய் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் வெளியேறக் கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஹூவேய் நிறுவனத்தின் உபகரணங்களை சீனா தனது உளவு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்தது. மேலும்...

3ஜி சேவையைக் கைவிடுகிறது ஏர்டெல் நிறுவனம்?

ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவையைக் கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதிக நஷ்டத்தை ஏர்டெல் நிறுவனம் சந்தித்தது.அந்நிறுவனத்தின் 12 கோடி இணையப் பயனாளர்களில் ஒன்பதரை கோடி பயனாளர்கள் 4ஜி சேவையைப் பயன்படுத்துகின்றனர். சேவையை மேம்படுத்தும் பொருட்டும்,...

பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியாவுக்கு ரூ.3,050 கோடி அபராதம்

ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டபோது, 2016ஆம் ஆண்டில் இடைஇணைப்புகளை வழங்கத் தவறியதற்காக, பாரதி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் அபராதம் விதிக்க டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  ஜியோ வாடிக்கையாளர், ஏர்டெல் அல்லது வோடஃபோன் ...

டாடா டெலிசர்வீசஸ், பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்பனை

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை ஏர்டெல்லுக்கு விற்பனை செய்ய, கடன், நிலுவைத் தொகை என 50 ஆயிரம் கோடி ரூபாயை டாடா குழுமம் செலுத்தி இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின் தொலைத்தொடர்பு துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன....

மார்ச் மாத கணக்கின்படி ஏர்டெல், வோடபோன் ஐடியாவுக்கு பின்னடைவு- ட்ராய்

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மார்ச் மாத கணக்கின்படி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது. ட்ராய் வெளியிட்டுள்ள அந்தத் தகவலின்படி, பெரும் சரிவைச் சந்தித்துள்ள ஏர்டெல் நிறுவனம், சுமார் ஒரு கோடியே 45 லட்சம் வாடிக்கையாளர்களை மார்ச்...

வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.4881 கோடி இழப்பு

4வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 4881 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலே அதிக சந்தாதாரர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில், 11 ஆயிரத்து 775 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாக...

ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் திணறும் ஏர்டெல்

மார்ச் மாதத்துடன் முடிந்த நான்காவது காலாண்டில் 2022 கோடி லாபம் ஈட்டியிருப்பதாக ஏர்டெல் நிறுவனம் செபியிடம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் உயர்வாகும். எனினும், பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவடைந்தால், ஏர்டெல்...

மெட்ரோ ரயிலில் சிக்னல் கிடைக்காமல் செல்போன்கள் செயலிழப்பு, பயணிகள் வசதிக்காக இலவச வை-ஃபை சேவை

சென்னையின் மெட்ரோ ரயில்களில் இலவச வை-ஃபை சேவை வழங்கப்படுகிறது. நேரு பூங்காவில் இருந்து கோயம்பேடு வரையிலான முதல் மெட்ரோ ரயில் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகியும் பூமிக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில்களில் செல்போன்கள் செயலற்று விடுவதாக பயணிகள் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளதால் வைஃபை...

ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 4.85 கோடி வாடிக்கையாளர் நீக்கம்

கடந்த மூன்று மாதங்களில் 4 கோடியே 85 லட்சம் வாடிக்கையாளர்களை நீக்கி உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான கோபால் விட்டல் விடுத்துள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச தொகை செலுத்தும் திட்டத்தின் கீழ்,...