​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குன்னூரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன

நீலகிரி மாவட்டம் குன்னூரில், நேற்றிரவு கொட்டித்தீர்த்த கனமழையால், காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகள், தெருக்களில் பாய்ந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பதிவாகி வருகிறது. குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில்...

வெள்ளத்தில் தத்தளித்த பெண்களைக் காப்பாற்ற சென்ற சகோதரர்கள் உயிரிழந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஆற்று வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த பெண்களைக் காப்பாற்றச் சென்று உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்களான ஜெகனும், குமரேசனும் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.  நிலக்கோட்டையை அடுத்த...

தென் மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீர்த்த மழை..!

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை, பேட்டை, சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததது.நெல்லையில்...

வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரை பார்வையிட்ட இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே

வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரை பார்வையிட்ட இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே, விரைந்து வெள்ளத் தடுப்பு திட்ட பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது வெனிஸ் நகரம். இதனை சுற்றிலும் கால்வாய்கள் உள்ளன. அண்மையில் வரலாறு காணாத...

செயின்ட் மார்க் பேராலயத்தை சூழ்ந்த வெள்ள நீர்

இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், செயின்ட் சதுக்கத்தில் உள்ள பேராலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெனிஸ் நகரில் அண்மையில் பெய்த கனமழையால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வெனிஸ் நகரத்தின் 85 சதவீதம் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதிகபட்சமாக,...

இத்தாலியில் மீண்டும் வரலாறு காணாத மழை பொழிவு

எழில் மிகுந்த இத்தாலியின் வெனிஸ் நகரை இரண்டாவது முறையாக அடை மழை தாக்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் லாகூன் நகரில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு வரை 187 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், புனித மார்க் சதுக்கம்,...

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

பவானிசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பவானிஆறு மற்றும் மாயாற்றின் வழியாக பவானிசாகர் அணைக்கு அதிகளவில்...

பலத்த மழையால் கன்னிமடுவு அருவியில் பாய்ந்தோடும் வெள்ளம்

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் கன்னிமடுவு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. கடம்பூர் மலைப்பகுதியில் அத்தியூர், கம்பத்ராயன்கிரி பகுதியில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை நீர் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள...

வைகையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: கல்பாலம் மூழ்கியது

மதுரை வைகையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கல்பாலத்தில் 2 ஆவது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையாலும் வைகையாற்றில் இரு கரையை தொட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கல் பாலம் தண்ணீரில்...

சேலத்தில் மழைநீர் ஓடையை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்

சேலத்தில் கனமழையால் வெள்ளம் தேங்கியுள்ள நிலையில், நீர்வழித்தடங்களை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றுவருகிறது. இரு தினங்களுக்கு முன் 64 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரிநீர் சிவதாபுரம் வழியாக திருமணி முத்தாற்றில் பாய்ந்தோடுகிறது. அப்பகுதியில்...