​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காட்டுமன்னார்கோவில் தொகுதி அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி செல்லும்

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறனின் தேர்தல் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த விசாரணையின் போது வாக்கு...

ரஜினி கருத்து: ஆதரவும் - எதிர்ப்பும்

தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971, ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின்...

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றிக்கு எதிரான திருமாவளவன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்கு...

2016 சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகள் விவகாரம் : நேரில் ஆஜராக மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன்  நேரில் ஆஜராக, மாவட்ட  தேர்தல் அதிகாரியான கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் முருகுமாறன் வெற்றிக்கு எதிராக விடுதலைச்...

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் காலமானார்

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. பி. எச். பாண்டியன் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற ஊரை சேர்ந்தவர். எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில்...

தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த ஏதுவாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும், நகராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்துவது...

மறைமுக தேர்தலுக்கான அவசரச் சட்டம்.. ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த ஏதுவாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும், நகராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக...

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் - அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வி.சி.க சார்பில் மனு

மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடத்த வழிவகை செய்து, கடந்த நவம்பரில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு, தடை விதிக்க கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல மனுத் தாக்கல் செய்திருக்கிறார்....

சிறுத்தைகளுக்கு காயத்ரி சவால்

இந்து மதவழிபாட்டு தளங்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்று டிவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியினர் செருப்புகளை வீசி போராட்டம் நடத்தினர். இதற்கிடையே காயத்ரி ரகுராமின்...

ஒரு கட்சி வேட்பாளர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது - உயர்நீதிமன்றம் விளக்கம்

ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் வேறோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்...