​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹைதி அதிபர் ஜேவெனெல் மோய்செ பதவி விலகக்கோரி போராட்டம்

கரீபியன் தீவான ஹைதியில் அதிபர் ஜேவெனெல் மோய்செ பதவி விலகக்கோரி லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். ஹைதியின் அதிபர் ஜோவெனெலின் நிர்வாகத்தின் கீழ் உணவு, எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணமதிப்பு பலவீனமடைதல், இரட்டை இலக்க பணவீக்கம், உறவினர்களுக்கு சலுகை...

அரசுக்கு எதிராக 4 நாட்கள் நடந்த போராட்டத்தில் 60 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 4வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து, பலி  எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. ஈராக்கில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, ஊழல், மோசமான பொது சேவை உள்ளிட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டு கடந்த 4 தினங்களாக...

பாகிஸ்தான் தூதரகத்தின் உண்மையான முகம் அம்பலம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் தூதரகம் உதவி செய்வதை, தேசிய புலனாய்வு முகமை தோலுரித்துக் காட்டியுள்ளது.  தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக லஷ்கர் ஈ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் உள்பட 12 பேர் மீது தேசிய...

வேலையின்மை, ஊழலை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

பொருளாதார பிரச்சனை, வேலையின்மையை காரணம் காட்டி ஈராக் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் பிரதமர் அப்துல் மஹதி தலைமையிலான அரசு பொருளாதார பிரச்சனை, வேலையின்மை, ஊழல் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காண வலியுறுத்தி நேற்று முன்...

கை விலங்கிட்டு கயிறு கட்டி கறுப்பினத்தவரை அழைத்துச் செல்லும் காட்சிகள்

அமெரிக்காவில் அத்துமீறி கட்டிடத்துக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்பட்ட கறுப்பினத்தவரை, குதிரையில் வந்த காவலர்கள் இருவர், விலங்கு பூட்டி, கயிறு கட்டி நடத்திச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி கேல்வெஸ்டன் என்ற இடத்தில் காவலர்கள் குதிரையில்...

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை - 26 பேர் பலி

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை, ஊழல், பொருளாதார சரிவு, அரசு நிர்வாக மந்த செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ஈராக்கில் போராட்டம் வெடித்துள்ளது. பாக்தாத்,...

மெக்ஸிக்கோவில் மாணவர் படுகொலை நினைவு தினம் பேரணியில் வன்முறை வெடித்தது..!

மெக்ஸிக்கோவில், ஜனநாயகத்திற்காக போராடிய மாணவகள் படுகொலை செய்யப்பட்ட 51ஆம் ஆண்டு நினைவு தின பேரணியில் வன்முறை வெடித்தது. மெக்ஸிக்கோவில், கடந்த 1968ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி ஜனநாயக சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தினர். அப்போது,...

ஈராக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்

ஈராக்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும், அதனால் ஏற்பட்ட வன்முறையிலும் 5 பேர் கொல்லப்பட்டனர். அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பாக்தாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகை...

அகதிகள் முகாமில் தீ விபத்து அடிப்படை வசதிகள் கேட்டு கலவரம்

கிரீஸ் நாட்டில் அகதிகளின் முகாமில் ஏற்பட்ட தீயில் சிக்கி தாயும், குழந்தையும் உயிரிழந்தைத் தொடர்ந்து அடிப்படை வசதிகள் கேட்டு அங்கு கலவரம் வெடித்துள்ளது. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தினால் அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். அவர்களில் கிரீஸ்...

இந்தோனேஷியாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது

இந்தோனேஷியாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர். அந்நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பை கலைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மாணவர்கள், தலைநகர் ஜகார்த்தாவில் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட முயன்றதால் அவ்வழிச் சாலைகளை...