​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீடியோ எடுத்ததால் விளாசிய போலீஸ்..! பரிசல் பயண பரிதாபம்..!

சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற இடத்தில், பரிசலில் கூடுதலாக ஆட்களை ஏற்றச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறி வழக்கறிஞரின் உதவியாளரை காவல்துறையினர் அடித்து இழுத்து சென்ற சம்பவம் நடந்து உள்ளது தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சென்னை ராயபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் குடும்பத்தினருடன்...

பாக். ராணுவத்தினரின் கிறித்துவர்களுக்கு எதிரான அத்துமீறலுக்கு கண்டனம்

பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் பலூசிஸ்தான் பகுதியில் சிறுபான்மை மக்களான கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல் அதிகரித்துள்ளது. அண்மையில் சிந்திக்கள் உள்ளிட்ட பலர் பலூசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல்கள் குறித்து ஐநா.மனித உரிமைக் குழுவிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது...

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் 2016இல் 30இலட்சம் பேர் உயிரிழப்பு - உலக நலவாழ்வு நிறுவனம்

அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக 2016ஆம் ஆண்டில் முப்பது லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மது குடிப்போர் எண்ணிக்கை, மதுவால் விளையும் தீமைகள் ஆகியவை குறித்து உலக நலவாழ்வு நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும்...

இந்தியாவில் முதல் முறையாக, பாலியல் குற்றவாளிகளின் பதிவேடு

இந்தியாவில் முதல் முறையாக, பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களின் விவரங்களுடன் கூடிய பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாலியல் குற்றங்களுக்காக, குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 4 லட்சத்து 40 ஆயிரம் பேரின் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பதிவேட்டில் பாலியல் குற்றவாளிகளின் பெயர், புகைப்படம், முகவரி...

கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈஸ்வரன்

கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.  அவர் விடுத்துள்ள அறிக்கையில், கருணாசின் பேச்சு தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி மக்களை...

அயோத்தியில் விரைவில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று பாஜகவுக்கு RSS வலியுறுத்தல்

அயோத்தியில் விரைவில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூன்று நாள் கருத்தரங்கின் இறுதிநாளான நேற்று தமது உரையின் நிறைவுப் பகுதியை வழங்கிய மோகன் பகவத், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது,...

எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறநிலையத்துறை ஊழியர்கள் காவல் ஆணையரிடம் மனு

அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வரும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.  கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகள் அடங்கிய அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று சென்னை...

ஸ்டெர்லைட் தில்லு முல்லு..! இது காசுக்கு சேர்த்த கூட்டம்

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட்டை...

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்கமாக திகழ்கிறது : இந்தியா

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அருகில் உள்ள நாடு, சொர்க்கமாக விளங்குவதாக, ஐ.நா. சபையில் பாகிஸ்தான் மீது இந்தியா மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. தூதுக்குழுவின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன், ஜெனீவாவில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்....

அரசியல் கட்சித் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் - ஈஸ்வரன்

அரசியல் கட்சித் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையிலோ,யாரையும் கொச்சைப்படுத்தும் வகையிலோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்தக்...