​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி கலவரம் : "அமித்ஷா, உடனடியாக பதவி விலக வேண்டும்" : சோனியா காந்தி

டெல்லி கலவர சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டை உலுக்கிய டெல்லி சம்பவம் குறித்து, விவாதிக்க டெல்லியில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி, கூட்டத்தில்...

சபர்மதி ஆசிரமம் சென்று காந்தியை குறிப்பிடாத டிரம்பை விமர்சித்த நெட்டிசன்கள்

சபர்மதி ஆசிரமம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையாளர் பதிவேட்டில் மகாத்மா காந்தியைப் பற்றி எதுவும் குறிப்பிடாதது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்தியா வந்துள்ள டிரம்ப் நேற்று தனது மனைவி மெலனியாவுடன் காந்தியின் சபர்மதி ஆசிரமத்து சென்று சுற்றிப் பார்த்தார் இதனைத் தொடர்ந்து பார்வையாளர் பதிவேட்டில்...

இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டால் பாதி வங்காளம் காலியாகி விடும்-கிஷண் ரெட்டி

இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டால் வங்காள தேசத்தில் உள்ள மக்களில் பாதி பேர் இந்தியாவுக்கு வந்து விடுவார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் ராகுல்காந்தி அவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்....

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மந்தமான வாக்குப் பதிவு...

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது. பிற்பகல் 4 மணி நிலவரப்படி, 42.29 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்...

4 நாள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ராஜபக்சே

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத்...

சிலர் என்னை தடி கொண்டு தாக்கினாலும் மக்களின் அன்பும் ஆதரவும் என்னை பாதுகாக்கும் - பிரதமர் மோடி

சிலர் தம்மை தடி கொண்டு தாக்க நினைத்தாலும், மக்களின் அன்பும் ஆதரவும் அதிலிருந்து பாதுகாக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அசாமில், கடந்த 50 ஆண்டுகளாக தனி போடோலாந்து கோரி போராடி வந்த குழுக்களால் வன்முறை, உயிரிழப்புகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன. இவற்றை முடிவுக்கு...

ராகுல்காந்தி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய கருத்தால் மக்களவையில் பெரும் அமளி

ராகுல்காந்தி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய கருத்தால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.பி.க்கள் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிய மோடிக்கு, இளைஞர்கள் தடியால் அடித்து...

ராகுல்காந்தியை "டியூப்லைட்" என மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி

மக்களவையில் பதிலுரையின்போது குறுக்கிட்ட ராகுல்காந்தியை டியூப்லைட் என பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.  குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு மக்களவையில் பதில் அளித்த பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். அப் போது ராகுல்காந்தி எழுந்து குறுக்கிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய...

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து 10 வரிகள் பேச முடியுமா? ராகுலுக்கு ஜே.பி.நட்டா கேள்வி

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ராகுல்காந்தி தொடர்ந்து பத்து வரிகள் பேசிவிட்டால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கான ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, குடியுரிமை திருத்த சட்டம்...

CAA பற்றி மம்தா, ராகுல், மாயாவதி விவாதிக்க தயாரா..? அமித் ஷா சவால்

எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லக்னோவில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை தம்முடன் நேருக்கு நேராக விவாதிக்க தயாரா...