​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் - வைரமுத்து

தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியை அப்போது அவர்...

அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருக்கிறார்.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்லாப்பாளையம், கடையம்,பணமலை, சங்கீதமங்கலம் உள்ளிட்ட கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது...

அதிமுக ஆட்சியில், 100 நாள் வேலைத்திட்டம், மகளிர் சுய உதவிகுழுக்கள் சின்னாபின்னமாகி விட்டது - மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில், 100 நாள் வேலைத்திட்டம், மகளிர் சுய உதவிகுழுக்கள் ஆகியவை சின்னாபின்னமாகி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வரும் 21 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை கப்பியம்புளியூர்,...

முதலமைச்சர் தீவிர வாக்குசேகரிப்பு

திண்டிவனத்தில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலை தடுக்க, மாநில அரசே மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.  விக்கிரவாண்டி சட்டமன்ற...

அரசுப் பேருந்தில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசுப் பேருந்தில் மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.  தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 21ஆம் தேதி அன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது....

இடைத்தேர்தல் தீவிர பிரச்சாரம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நாங்குநேரி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

நாங்குநேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய தொகுதியில் வரும் 21ஆம் தேதி அன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது....

சீன அதிபரை மனமார வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகம் வரும் சீன அதிபரை மனமார வரவேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை...

மூன்று தொகுதிகளிலும் களைகட்ட துவங்கியுள்ள தேர்தல் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 21ம்...

20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி மூன்றாவது முறையாக...