​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை குணப்படுத்த முதலமைச்சர் உதவி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கோவநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சந்திரகுமார் - கலையரசி தம்பதியின் மகனான லோகேஷ் என்ற 12 வயது சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட நிலையில்...

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வேட்பு மனு தாக்கல்

தெலுங்கானா மாநில முதலமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள அவர், நல்ல நேரத்தை கணக்கில்...

வெங்காயம் விளைவது எங்கே என்பது கூட ராகுலுக்குத் தெரியாது: மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங்

வெங்காயம் விளைவது மண்மீதா? மண்ணுக்கு அடியிலா? என்பது கூட ராகுல் காந்திக்குத் தெரியாது என மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் தேர்தல் பரப்புரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் மகன்...

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் போட்டி

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளதாக தகவல் வெளியானது....

நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலுக்கும் வாய்ப்பு - ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்பு இருப்பதால் தயாராக இருக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை ஸ்டாலின் வாழ்த்தினார். பின்னர் மேடையில் பேசிய அவர்,...

அம்மா உணவகத்தில் இட்லியை சாப்பிட்டு பார்த்து முதலமைச்சர் ஆய்வு

சென்னையில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம ஆய்வு செய்தார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, திடீரென மருத்துவமனை வளாகத்தில்...

மத்தியில் பா.ஜ.க.வையும் தமிழகத்தில் அதிமுக-வையும் ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு - மு.க.ஸ்டாலின்

மத்தியில் பா.ஜ.க.வையும் தமிழகத்தில் அதிமுக-வையும் ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி மறைந்த நூறாவது  நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின்...

ஜெயலலிதாவின் புதிய திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

அதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின்  புதிய திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மரியாதை செலுத்தினர்.  ஜெயலலிதான் பிறந்த நாளன்று அவருக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை திறக்கப்பட்டது- ஆனால் அந்த சிலை ஜெயலலிதா போல் இல்லை...

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதி விவசாயத்தற்காக தண்ணீர் திறக்கபட்டு வந்தது. இந்நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள்...

கஜா புயல் நாளை மாலையில் கரையை கடக்கும்.. வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நாளை மாலையில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும்,...