​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கடல்சீற்றம் காரணமாக, ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், மணியன்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கடல்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது. கடலுக்குச் செல்வது பாதுகாப்பில்லை என்பதால், அந்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள்,...

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் ‘சாகர் கவாச்’ ஒத்திகை

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி மும்பையில் பயங்கரத் தாக்குதல்களை நடத்தினர் இதையடுத்து கடலோர மாநிலங்கள் ஆண்டு தோறும்...

மண்டபம் அருகே பெரிய ரோந்துகப்பல்கள் வந்து செல்ல ஏதுவாக கடல் பரப்பை ஆழப்படுத்தும் பணிகள்

இந்திய கடலோரக் காவல்படை ரோந்துகப்பல்கள் வந்து செல்ல ஏதுவாக மண்டபம் அருகே கடல்பரப்பை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடல்பரப்பில் அந்நிய ஊடுவருவலை தடுக்கும் வகையில், கடலோர காவல்படையில் ஏராளமான கப்பல்கள் கண்கணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அவ்வாறு ரோந்துப் பணியில் ஈடுபடும் பெரிய...

இயற்கை சீற்றங்களின் போது மீனவர்களுக்கு உதவும் நேவிகேஷன் செல்போன் செயலி விரைவில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் - இஸ்ரோ இயக்குனர் சிவன்

இயற்கை சீற்றங்களின் போது மீனவர்கள் திசை மற்றும் இடம் அறிந்து கரை திரும்ப உதவும் செல்போன் செயலி விரைவில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று இஸ்ரோ இயக்குனர் சிவன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் சென்ற அவர் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்...

இஸ்ரோ தலைவர் சிவன் ஏழுமலையான் கோயிலில் வழிபாடு

இயற்கை சீற்றங்களின்போது மீனவர்கள் கரை திரும்ப உதவுவதற்காக தயாரிக்கப்பட்ட செல்போன் செயலி விரைவில் வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவன், செயற்கைகோள், ராக்கெட்...

லட்சத்தீவு கடற் பகுதிகளுக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்லவேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

மீனவர்கள் வடக்கு கேரளா, தெற்கு கர்நாடகா, லட்சத்தீவு கடற் பகுதிகளுக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த...

கொச்சியின் கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான செயல் விளக்கம்

கேரள மாநிலம் கொச்சியின் கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் கடலோர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆபத்து காலங்களில் கடலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அங்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மீனவர்கள் கடலை...

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் இல்லாத மழை

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள அப்பகுதியில் பெய்த திடீர் மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே...

கரைஒதுங்கிய மீனவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க கோரிக்கை

புயல் எச்சரிக்கை காரணமாக, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாக, அம்மாவட்டத்தில் 5-வது நாளாக விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி...

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக ரூபாய் 10 லட்சம் நிதி

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.ஒக்கி புயலின்போது உயிரிழந்த 27 தமிழக மீனவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம் ஏற்கெனவே 5 கோடியே...