​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுனாமி நினைவு தினம்.. நீங்காத சோகத்தில் கடலோர மக்கள்..!

15 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை, கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2004ம் ஆண்டு இதே நாளில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த...

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது

தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. பேராலயங்களில் வைக்கப்பட்ட குழந்தை ஏசுவின் உருவசிலையை ஏராளமானோர்...

தமிழகத்தில் 3 மீன்பிடித் துறைமுகங்கள்..!

தமிழகத்தில் 3 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பதற்கு 453 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி, திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் குப்பம், கடலூர் முதுநகர் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதையடுத்து,...

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்...

போர்பந்தர் அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 6 மீனவர்கள் மீட்பு

குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 6 மீனவர்களை, கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மீனவர்கள் சென்ற படகில் விரிசல் ஏற்பட்டு கடல்நீர் உள்ளே புகுந்ததுடன், எஞ்சினிலும் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும், கடலோர காவல் படையின்...

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும்....

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பணிக்கு சென்றவர்களும் நனைந்தவாறே வீடு...

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும் இராமநாதபுரம்,  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.  வட...

கடல் கொந்தளிப்பில் சிக்கி உயிருக்கு போராடிய மீனவர்கள்.. கடும் சவால்களுக்கிடையே மீட்பு

அயர்லாந்தில் கடும் கடல் கொந்தளிப்பில் சிக்கி உயிருக்குப் போராடிய 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அயர்லாந்தின் டோனேகல் கடற்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சென்ற படகு திடீரென சேதமடைந்துள்ளது. தொடர்ந்து அப்படகை இயக்க முடியாத சூழலில், அவர்களின் படகு கடும் கடல்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 1,000 பேர் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு

ராமேசுவரம் மீனவர்கள் ஆயிரம் பேர் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரம் மீனவர்கள், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்கள்,...