​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று CBI நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். குட்கா முறைகேடு வழக்கில், கிடங்கு உரிமையாளர் மாதவராவ் அவர்களது கூட்டாளிகள் உமாசங்கர், சீனிவாசராவ், உணவுபாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்வரித்...

குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று மாதவராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டுள்ள கிடங்கு உரிமையாளர் மாதவராவை செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மாதவராவ், அவரது இரு பங்குதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 5...

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத்குமாருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில்...

குட்கா ஊழல் வழக்கில், மாதவராவ் உள்ளிட்ட 5 பேருக்கு சி.பி.ஐ காவல்

குட்கா முறைகேடு வழக்கில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ் உள்பட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  குட்கா முறைகேடு வழக்கில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமா சங்கர்...

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவுடன் தொடர்புடைய 6 பேரிடம் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் மேலாளர்கள், நிர்வாகிகள் என 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ சோதனையை தொடர்ந்து அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத குட்கா ஆலை அதிபர் மாதவராவ்,...

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி CBI மனுத்தாக்கல்

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, சட்டவிரோத குட்கா ஆலை...

குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை? - மு.க.ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர்  விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி ராஜேந்திரனையும் கைது செய்ய சிபிஐ தயங்குவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி.க்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவ் கைது செய்யப்பட்டு...

சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவ ராவ் உட்பட 5 பேர் அதிரடி கைது

குட்கா ஊழல் வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட கைது செய்யப்பட்ட 5 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. " குட்கா முறைகேடு வழக்கில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் அண்மையில் சிபிஐ 12...

அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 35 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

குட்கா முறைகேடு வழக்கில்  35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் பான் மசாலா, குட்கா ஆகியவற்றை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கடந்த 2013ஆம் ஆண்டு தடை...

சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன் சி.பி.ஐ. சோதனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெற இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது செய்திக் குறிப்பில் குட்கா, பான்மசாலா தொடர்புடைய மாதவராவ் என்ற நபரை நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தித்ததில்லை என்று கூறியுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற...