​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதலியை கேலி செய்த நண்பனை கொலை செய்ததாக 5 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காதலியை கேலி செய்த நண்பனை, கொன்று எரித்து கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கடித்த நண்பன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் 2 மாதங்களாக மாயமான நிலையில், அரைகுறையாக எரிக்கப்பட்ட அவரது உடலை...

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்கரை பகுதியில் தீவிரக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு...

"மழைநீர்; உயிர் நீர் - சேகரிப்போம்" மக்களை ஊக்குவிக்க புதுத்திட்டம்

சென்னையில் மழைநீர் சேகரிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடும் பொதுமக்களை ஊக்குவிக்க, பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. மழை நீர் உயிர் நீர் என்பது வெறும் வாசகம் மட்டுமல்ல... நமது அன்றாட வாழ்க்கையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயற்கை அளித்த...

தேனி, விருதுநகர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை

தேனி, விருதுநகர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர்...

167 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகம்..! பராமரிப்பு இல்லாமல் இருக்கும் அவல நிலை..!

சென்னையில் வெளிமாநில  சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இருந்த 167 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகம் போதிய பராமரிப்பு இல்லாமல் மழை நீர் ஒழுகும் நிலையில் இருப்பதாகவும், தீத்தடுப்பு சாதனங்கள் அனைத்தும் காலாவதியாகி மாதங்கள் பல கடந்த நிலையில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாகவும்...

வங்க கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதால் வட தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கிழக்கு மத்திய வங்கக் கடலில்...

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு TN Smart அமைப்பு : அமைச்சர் RB உதயகுமார்

சென்னையில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, TN Smart என்ற தொழில்நுட்பம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், சென்னை, மும்பை வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின்...

அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் வெள்ளம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். வில்மிங்டன் பகுதியில் இருந்து ஏராளமானோர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வடக்கு கரோலினாவில் 12க்கும் மேற்பட்ட...

சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை

சென்னையில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்த நிலையில், தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று...

வேலூர் வாணியம்பாடியில் அமைச்சர் செல்லூர் ராஜூவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவாக தொடங்கக் கோரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ரெட்டித்தோப்புப் பகுதியையும் ஆம்பூரையும் இணைக்கும் பாதையில் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுகிறது. தண்டவாளம் அமைக்கப்பட்டபோது பாதையின் குறுக்கே கட்டப்பட்ட குறுகிய...