​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேஜாஸ் ரயிலில் பயணிகள் பொழுது போக்க புதிய வசதி

தேஜாஸ்  விரைவு ரயிலில் பயணிப்போர் செல்போன்கள், லேப் டாப்புகளில்  தங்களுக்கு பிடித்த மொழி திரைப்படங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை காண வை-பையை (wi fi) அடிப்படையாக கொண்ட மேஜிக் பாக்ஸ் பொழுதுபோக்கு  வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு...

மத்திய அரசுடன் தமிழக அரசு சுமூகமாக இருப்பதால் தமிழகத்திற்கு 9 மருத்துவக்கல்லூரிகள் - துணை முதலமைச்சர்

மத்திய அரசுடன் தமிழக அரசு சுமுகமான முறையில் இருப்பதால் தமிழகத்துக்கு 9 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற  எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு...

மூட்டுவலிக்கு விஷத்தை விற்கும் கொடைக்கானல் கடைகள்..! மருத்துவர்கள் எச்சரிக்கை

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் மூட்டுவலி தைலம் என்று தடைசெய்யப்பட்ட கொடிய விஷத்தை நிறம் மாற்றி விற்றுவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  இயற்கை எழில் கொஞ்சும் , மலைகளின் இளவரசியாக வர்ணிக்கப்படும் கொடைக்கானல் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக...

800 வகையான உணவுகளை தயாரித்து அசத்தும் Robot Chef

மதுரையில் ரோபோ செப் (Robo chef) எனும் பெயரில் 800 வகையான உணவுகளை தயாரிக்கும் ரோபோவை மென்பொறியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.   சமையலறையில் பெண்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறி வெட்டும் கருவி, இண்டக்ஷன் ஸ்டவ்...

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - அசாம் மாநில இளைஞன் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். இதில் மேலும் 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சிவகாசி அருகே உள்ள...

வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆயுதம் வழங்க கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலர், மற்றும் டிஜிபி பதில் அளிக்க உத்தரவு

வாகன சோதனை மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை சரிசெய்யும் போது  காவல்துறையினர் ஆயுதம் ஏந்தி இருப்பதை உறுதிப்படுத்த கோரிய வழக்கில், தமிழக உள்துறை செயலர், மற்றும் டிஜிபி பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல...

மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வார காலம் அவகாசம்

மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில், தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வார காலம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது,...

எச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2018-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி விழா மேடைக்கு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி...

ஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தேனி மாவட்ட ஆவின் தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர், ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆவின் விதிகளை மீறி நிர்வாக குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதாக பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த...

“காவலன் SOS” செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

மதுரையில் இளைஞர் ஒருவர் நடத்தி வரும் பாரம்பரிய உணவகத்தில் காவலன் செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கி கவனம் ஈர்த்து வருகிறார். பெண்களின் பாதுகாப்பைக் கருதி தமிழக காவல்துறையால் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது காவலன் செயலி. இதனை...