​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்: தமிழக அரசு பரிசீலனை..!

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றிலிருந்த அணை கடந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இடிந்து விழுந்தது....

விவசாயியாக இருப்பதை நினைத்து எப்போதும் பெருமை கொள்வேன் -முதலமைச்சர்

விவசாயியாக இருப்பதை நினைத்து தான் எப்போதும் பெருமை கொள்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் மகன் ஆனந்த் பிரபு - ஞான ரூபிணி திருமணத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் நடத்திவைத்தனர். விழாவில் பேசிய முதலமைச்சர்...

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கணவன், மனைவியை கொலை செய்து விட்டு திருடிச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதால், 2 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகள் பிடிபட்டுள்ளனர். மண்ணச்சநல்லூரைஅடுத்த பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - லதா தம்பதி. 2014ஆம் ஆண்டு திருமணம்...

எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். எடப்பாடி பயணியர் மாளிகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற முதலமைச்சர், தொடர்ந்து எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நேரில் சென்று...

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியைக் கொன்று நகை திருடிய வழக்கில் கல்லூரி மாணவர்கள் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியை கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் சென்ற வழக்கில் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் - லதா தம்பதியர், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி...

திருவாரூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் திட்டம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து, திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த மாதம் 7ம் தேதி பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பேசிய...

கோழி இறைச்சியுடன் கொரோனாவை இணைத்து வதந்தி என புகார்- முதலமைச்சரிடம் மனு

கொரோனா வைரஸ் பரவுவதால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டாம் என சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளத்தினர் மனு அளித்தனர். நாமக்கல்லுக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு...

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழக ஹஜ் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 6,028 விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2020 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம்...

கோகுலம் பால்பண்ணை- உரிமையாளர் வீட்டில் வருமானவரி ரெய்டு

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செயல்பட்டு வரும் தனியார் பால்பண்ணை மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நம்பியூரை தலைமையிடமாக கொண்டு கோகுலம் எனும் பெயரில் பழனிசாமி என்பவர் பால்பண்ணை நடத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும்...

"அதிமுக அரசை ஒருபோதும் திமுகவால் குறை கூற முடியாது"

அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களில் குறைகள் உள்ளதாக திமுகவால் ஒருபோதும் கூற முடியாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 47,072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதலமைச்சர்,...