​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹிமாச்சலை வாட்டும் கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு

ஹிமாச்சல் பிரதேசத்தை ஒருபுறம் கனமழை மிரட்டி கொண்டிருக்க, மறுபுறத்தில், பனிப்பொழிவு வாட்டியெடுக்கத் தொடங்கியிருக்கிறது. ஹிமாச்சல் பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிட்டீ(Lahaul-Spiti) மாவட்டத்தில், பிங்டாம் லா(Pingdom La) மலைப்பகுதியில், பனிப்பொழிவில் சிக்கிய 2 ஜெர்மானியர்களை இந்திய விமானப்படையினர் மீட்டனர். இவர்கள் தவிர மலையேற்றத்திற்காக சென்ற 300 பேர்...

ராணுவத்தினருக்கான உடைகள், சாதனங்கள் வடிவமைக்கும் பணிகள் நிறைவு

கடுங்குளிரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்குவதற்காக பிரத்யேக உடைகள் வடிவமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள டோக்லாம், சியாச்சின் போன்ற பனிப்பொழிவு மிக்க பகுதியில் முகாமிட்டுள்ள வீரர்களுக்கு, கடுங்குளிரை தாங்கும்வகையில் பிரத்யேக...

பத்ரிநாத் பகுதியில் 3வது நாளாக தொடரும் கடும் பனிப்பொழிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், பத்ரிநாத் விஷ்ணுகோயிலுக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 மாத இடைவேளைக்கு பிறகு பத்ரிநாத் விஷ்ணு கோயில், பக்தர்களின் வழிபாட்டுக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், கோடை விடுமுறையை...

சுற்றுலாத்தலமான சிம்லாவில் ஆலங்கட்டி மழை

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் ஆலங்கட்டி மழை பெய்தது. டெல்லி, அரியானா, சண்டிகார் பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கி வரும் நிலையில் வடமாநிலங்களில் பரவலாக மோசமான வானிலை நிலவுகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் தலமான சிம்லாவில் காலை முதலே  கடும் பனிப்பொழிவு...

கேதார்நாத் கோவில் 6 மாதங்களுக்கு பின் மீண்டும் திறப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள, புகழ் பெற்ற Kedarnath கோவில், ஆறு மாதங்களுக்கு பின், திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வண்ண மலர்களால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  மேளங்கள் இசைத்து, பக்தி பாடல்களை பாடியவாறே, பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.  கேதார்நாத் கோவில், கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால்...

சீனாவில் பனிப்பொழிவால் வெண்ணிறமாகக் காட்சிதரும் மலை

சீனாவில் பனிப்பொழிவின் காரணமாக, ஒரு மலைப்பிரதேசமே வெண்ணிறத்துடன் அழகாக காட்சியளிக்கிறது. சிச்சுவான் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடுங்குளிர் நிலவுவதோடு, பனிப்பொழிவும் காணப் படுகிறது. குவாங்வு ((Guangwu Mountain)) மலைப்பகுதியில் பனிப்பொழிவின் காரணமாக, மரக் கிளைகள், இலைகள், நடைபாதை, காட்சிமேடை, நீர்நிலைகளின் கரைகள் என...

பெய்ஜிங்கில் 30 ஆண்டுகளுக்குப் பின் பெய்த முதல் ஏப்ரல் பனிப்பொழிவு

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 30 ஆண்டுகளுக்குப் பின் பெய்த முதல் ஏப்ரல் மாத பனிப்பொழிவால் சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெய்ஜிங்கில் 30 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக ஏப்ரல் மாதத்தில் பனிப்பொழிவு நடைபெற்றுள்ளது. இந்த அபூர்வத்தைக் காண சீனப்பெருஞ்சுவரை நோக்கி சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவில் பெய்த பனிப்பொழிவால் பொதுமக்கள் உற்சாகம்

அமெரிக்காவில் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில் புதிதாகப் பெய்த பனியால் மக்கள் உற்சாகம் அடைந்தனர். வாஷிங்டனில் உள்ள வணிக வளாகத்தின் திறந்தவெளி அரங்கில் பெய்த பனியை ஆண்களும் பெண்களும் பந்துகளாக சுருட்டி ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்ந்தனர். யாருக்கும் காயம்...

பெர்லின் நகரில் கடுமையான பனிப்பொழிவு

ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடுமையான பனிப்பொழிவு பெய்யத் தொடங்கியுள்ளது. குளிர்காலத்தின் தாக்கம் சற்றே தணிந்திருந்த நிலையில், வானிலையில் எற்பட்ட மாற்றத்தால் மீண்டும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பெர்லினில் உள்ள முக்கிய இடங்களான BRANDENBURG GATE, நாடாளுமன்ற கட்டடம், உள்ளிட்டவை பனி போர்த்திய நிலையில் காணப்படுகின்றன....

வடகிழக்கு சீனாவில் வசந்தகாலம் முடிவுக்கு வந்தது

சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் தேங்கியிருக்கும் பனி மற்றும் பனிச்சேறுகளை அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. லியாவோனிங் மற்றும் ஜிலின் மாகாணங்களில் கடந்த இருமாதங்களுக்கும் மேலாக வசந்தகாலமாக பனி பொழிவு இருந்தது. இதனால் சாலையெங்கும் ஒரு அடி உயரத்திற்கும் அதிகமாக பனிப்பொழிவு இருந்தது....