​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டதா? அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டதா என  அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெருவோரம் தூங்கிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட இரு குழந்தைகளை கண்டுபிடிக்கக்கோரி எக்ஸனோரா அமைப்பின்...

மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பிடிபட்டால், திரும்ப ஒப்படைக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பிடிபட்டால், திரும்ப ஒப்படைக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்திமங்கலம் பகுதியை சேர்ந்த பாண்டியராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல  மனுவினை தாக்கல் செய்திருந்தார். மேம்பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், வெள்ளாறு ஆற்று...

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள்ள் எந்த நிலையில் உள்ளன? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அக்டோபர் 9 ஆம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கு, நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி சுந்தர் அடங்கிய...

கன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிராங்கோ முலக்கல்லை அக். 6வரை காவலில் வைக்க உத்தரவு

கன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் ஆயர் பிராங்கோ முலக்கல்லை அக்டோபர் 6வரை சிறையில் அடைக்க கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிராங்கோ  தன்னை 13முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கோட்டயம் மாவட்டம் குறவிளங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்...

தமிழகத்தில் ஆறுகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழகத்தில் ஆறுகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும் என அரசிடம் உரிய விளக்கம் கேட்டு அறிக்கை சமர்பிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி வீணாக கடலில் கலக்கும் சிறு நதிகளின் குறுக்கே...

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2-ல் ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது தலைமையிலான அமர்வுகள்,8 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்

அக்டோபர் 2ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது தலைமையிலான அமர்வுகள், 8 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் வழக்கு, அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை...

நிர்மலா தேவி உள்ளிட்ட 3பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைதான பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் கைதான நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை...

அரசு நிலத்தை மீட்பதில் கடமை தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவை மாவட்டத்தில் அரசு நிலத்தை மீட்பதில் கடமை தவறிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தை அடுத்த இருப்பாநத்தத்தில் பாகப் பிரிவினை செய்யப்பட்ட மூதாதையர் நிலத்துக்கு அரசு புறம்போக்கு நிலம் என்று கூறி வட்டாட்சியர்...

வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு - 4 வாரங்களில் பரிசீலித்து உத்தரவிட தமிழக அரசுக்கு ஆணை

வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய்  இழப்பீடு வழங்க கோரிய மனு   மீது 4 வாரத்தில் பரிசீலித்து உத்தரவிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த 2016 டிசம்பரில் வீசிய வர்தா புயலின்போது கடலுக்கு சென்ற 9...

பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.  ஆளுநர் மாளிகையில் பன்வாரிலாலை சந்தித்த அற்பதம் அம்மாள், தமது மகனின் வழக்கு தொடர்பான 3...