​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் குறைந்து வருகிறது : அருண்ஜேட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் வங்கிகளின் வாராக்கடன் குறைந்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜேட்லி, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 36 ஆயிரத்து 551 கோடி...

வீடியோ எடுத்ததால் விளாசிய போலீஸ்..! பரிசல் பயண பரிதாபம்..!

சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற இடத்தில், பரிசலில் கூடுதலாக ஆட்களை ஏற்றச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறி வழக்கறிஞரின் உதவியாளரை காவல்துறையினர் அடித்து இழுத்து சென்ற சம்பவம் நடந்து உள்ளது தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சென்னை ராயபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் குடும்பத்தினருடன்...

அரசு மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கட்டுரை சமர்ப்பித்தால் மட்டுமே பதவி உயர்வு

அரசு மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கட்டுரை சமர்ப்பித்தால் மட்டுமே பதவி உயர்வு என்ற இந்திய மருத்துவக் கழக அறிவிப்பை தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்திய மருத்துவ கழகம் கடந்த 2013-ஆம் ஆண்டு விதி ஒன்றை அறிவித்தது. அதன்படி இந்தியா...

கருணாசின் நடவடிக்கை அரிவாளால் வெட்ட வந்ததுபோல் உள்ளது - ராஜேந்திரபாலாஜி

அரிவாளை கொண்டு வெட்ட வந்ததுபோல் எம்.எல்.ஏ. கருணாசின்  நடவடிக்கை இருந்ததால் அவரை கைது செய்து, சட்டம் தன் கடமையை செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்  ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட...

நொய்யல் ஆற்றில் தொடரும் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பு

உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி நொய்யலாற்றில் திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கப்படுவது தொடர்வதாகவும், இதனால் கரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகளை கலக்கக்கூடாது என்றும் கழிவுகளை சுத்திகரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்...

ஹெச். ராஜா மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் - ஆர்.பி.உதயகுமார்

நீதிமன்றத்தையும் காவல்துறையையும் அவதூறாகப் பேசிய வழக்கில் ஹெச். ராஜா மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பங்குன்றம் விளாச்சேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து...

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு அதிகாரிகளுக்குப் பயிற்சி

வடகிழக்குப் பருவமழைக் காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.  சென்னைப் பசுமைவழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு பேரிடர் தணிப்பு முகமையும் ஆசியப் பேரிடர் ஆயத்த மையமும் இணைந்து வடகிழக்குப்...

குற்றப்பின்னணி கொண்டவர்கள் அரசியலில் நுழைவதை, சட்டம் இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றம்தான் தடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றப்பின்னணி கொண்டவர்கள் அரசியலில் நுழைவதை, சட்டம் இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றம்தான் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், அரசியலில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், குற்றவழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு விட்டாலே,...

இரசாயன உரங்களின் விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்

இரசாயன உரங்களின் விலை உயர்வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரசாயன உரங்களின் விலையேற்றம் விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. உர மூட்டையின் விலை 1150 ரூபாயில் இருந்து 1425...

வழக்கு விசாரணையின் போதே சரிந்து விழுந்த நீதிமன்ற கட்டடத்தின் மேற்கூரை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் வழக்கு நடைபெற்றுக் கொண்ட போதே நீதிமன்ற கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்யாறு ஆற்காடு சாலையில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தின் இரண்டாம் தள மேற்கூரை நேற்று முற்பகல் வழக்கு விசாரணை...