​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

6 மணி நேரம் காத்திருந்து தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

சுமார் 6 மணி நேரம் காத்திருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ரோமேஷ் சபர்வாலை நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக சுனில்...

ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா - பிப்.7ல் அடிக்கல் என முதலமைச்சர் அறிவிப்பு

ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அமையவிருக்கும் கால்நடைப் பூங்காவிற்கு, வருகிற 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அதிமுக உள்ளாட்சித் தேர்தல் வெற்றிப்...

டெல்லி சட்டமன்ற தேர்தல்: நேற்று மனுத்தாக்கலை தவறவிட்ட நிலையில் கெஜ்ரிவால் இன்று மனுத்தாக்கல்

நீண்ட நேரம் பேரணி நடத்தியதால் நேற்று வேட்புமனுத்தாக்கலை தவறவிட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீண்ட நேரம் காத்திருந்து மனுத்தாக்கல் செய்தார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணியாக புறப்பட்டு சென்றார். ஆனால் அதிகமான கூட்டத்தால் அவரால் குறிப்பிட்ட...

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றிக்கு எதிரான திருமாவளவன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்கு...

அமெரிக்க குடியுரிமையைப் பெற முட்டி மோதும் வெளிநாட்டவர்..!

அதிபர் டிரம்பின், வெளிநாட்டவர் குடியேற்றக் கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மை, இந்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கானோர் முட்டி மோதுவதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்க குடியுரிமையை பெறுவது அங்கு பணியாற்றும் ஏராளமான...

இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்

தி.மு.க. தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணியளவில் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், கட்சியின்...

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிப்பெறுவது உறுதி - மு.க.ஸ்டாலின்

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிப்பெறுவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அரசின் அதிகார பலத்தை மீறி...

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்

அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்த அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக வளர்பிறை போல வளர்ந்து வருவதற்கு...

உள்ளாட்சி தேர்தல் - மறுவாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் முடித்துவைப்பு

வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டால், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மறு வாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது....

CCTV பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா? தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என, உத்தரவாதம் அளிக்க முடியுமா என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணக்கு வந்தபோது, மாநில தேர்தல்...