​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வங்கதேசத்தில் வீடுகள் தீயில் கருகியதால் 50,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு..!

வங்கதேச தலைநகரில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்காவில் மிர்பூர் எனும் இடத்தில் குடிசை பகுதி உள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு, வரிசையாக இருந்த குடிசை வீடுகளில் திடீரென தீப்பற்றியது. பிளாஸ்டிக் போன்ற...

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரெனப் பற்றிய தீயால் 3 தளங்களில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டபோதும், நூற்றுக்கணக்கான நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் உயிர் தப்பியுள்ளனர். டெல்லி ஏய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5 மணியளவில் தீப்பிடித்தது. முதல்தளம் மற்றும் இரண்டாம் தளத்தில்...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் தீவிர சிகிச்சை பெற்று வரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நலன் அறிய...

சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் பலி

உக்ரைனில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒடேசா என்ற நகரில் ‘டோக்கியோ ஸ்டார்’ என்ற ஓட்டல் உள்ளது. சுமார் 273 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் நேற்று...

சாக்குகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென பற்றிய தீ

தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டியில் சாக்குகள் வைக்கப்பட்டிருந்த குடோன் தீப்பற்றியதில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாக்குகள் எரிந்து சாம்பலாயின. குண்டல்பட்டி, சேலம்-தேசிய நெடுஞ்சாலையில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான சாக்கு குடோன் உள்ளது. இங்கு, நியாயவிலைக் கடையில் பயன்படுத்தப்படும் சாக்குகள் சேகரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்...

பணிக்கு செல்வோரின் குழந்தைகளை பாதுகாக்கும் மையத்தில் தீவிபத்து

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பணிக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை பாதுகாக்கும் மையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவின் எரீ ((Erie)) நகரில் அமைந்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், இரவுப் பணிக்கு செல்லும் பெற்றோர் சிலர்...

தனியார் கேஸ் புக்கிங் அலுவலகத்தில் தீவிபத்து

திருவண்ணாமலை அருகே தனியார் கேஸ் புக்கிங் அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்கிருந்த கணினிகள் உபகரணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமானது. திருவண்ணாமலையிலிருந்து தண்டராம்பட்டு செல்லும் சாலையில் லோகலட்சுமி கேஸ் புக்கிங் அலுவலகம் இயங்கி வருகிறது. காலையில் அலுவலகத்தை பணிப்பெண் சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது,...

பிரிட்டானியா நிறுவன குடோனில் பயங்கர தீ

ஆந்திராவில் உள்ள பிரிட்டானியா நிறுவனத்துக்கு சொந்தமான பிஸ்கட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.  ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கும் கோனடனபாடு பகுதியில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் செயல்பட்டுவருகிறது. கடந்த ஜூன் மாதம்...

மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து - 4 மாடிகளில் தீ

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.  சென்னை மண்ணடியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளது. 5 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை இந்தக் கட்டிடத்தின் முதல் தளத்தில் பிடித்த...

அமெரிக்காவில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் தீக்கிரையானது..!

அமெரிக்காவில் வரலாற்று புகழ்மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று தீக்கிரையானது. மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்பேலியா((Westphalia)) என்ற இடத்தில் கடந்த 1895ம் ஆண்டு மரப்பலகைகளில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த தேவாலயம் கடந்த இரு தினங்களுக்கு முன் திடீரென தீப்பற்றியது. வளாகம்...