​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது

சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கிடங்குகள் மீது ஏமன் ஹவுதி படையினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதன் விளைவாக பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை  உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் அச்சம்...

பிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..!

69 வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும் சிறப்புகளை இந்த செய்தி... 1950ம் ஆண்டில் ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி தமது தந்தைக்கு உதவியாக தேநீர் விற்பவராக தமது வாழ்க்கையை தொடங்கினார். தமது எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்...

தமிழகம் முழுவதும் இடியுடன் கனமழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலையில் லேசான மழை பெய்தது. நள்ளிரவில் குளிர்ந்த காற்று...

புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அந்த கோவிலில் ஒவ்வொரு மாத பிறப்பின் போதும் நடை திறக்கப்படும். ஓணம் பண்டிகைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை திறக்கப்பட்டிருந்தது. இந்த பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து...

கொலம்பியாவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்

கொலம்பியா நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். அந் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பொபையன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று, லொப்ஸ் நகருக்கு...

பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க ஆளுநரிடம் கோரிக்கை

 பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய பதவிகளுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பை பரிசீலித்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், 7 பேர் விடுதலை தொடர்பாகவும் ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாக விடுதலை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆண்டிபட்டி ,பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. காலையில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை...

இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தி.மு.க. போராட்டம் அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தித் திணிப்பு கருத்தை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  சென்னையில் அந்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின்...

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது - பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

சவூதி அரேபியாவிலுள்ள ஆரம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என நம்புவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய்...

தீவிரவாத தாக்குதல் மிரட்டல் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

நவராத்திரியின் போது, கோவில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக வந்த பயங்கரவாத மிரட்டலை அடுத்து சென்னை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று மேலும் 5 மாநிலங்களிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நவராத்திரி பண்டிகை நாடு...