​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் வசமிருந்த தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவின் ராதாமணி, உடல்நலக்குறைவால்...

வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் திமுகவுக்கு இல்லை - முக ஸ்டாலின்

இடைத்தேர்தலில் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சாதி உணர்வையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், சில கட்சிகள் திட்டமிட்டு சாதி உணர்வை கிளைப்பியதாகவும், என்றாலும் மக்கள்...

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி பெற்றுள்ளார்.  நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஒரு லட்சத்து...

இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,...

காங். வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திடியூர்,...

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். திருவேங்கடநாதபுரம், மேலப்பாட்டம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும்...

நாங்குநேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய தொகுதியில் வரும் 21ஆம் தேதி அன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது....

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிகளுக்கும்...

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு போட்டியிட...

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கீழடியில் உலகத்தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, திமுக கூட்டணி எம்.பிக்கள் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலை நேரில் சந்தித்து வழங்கினர். கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை, பொதுமக்கள் பார்வைக்கு...