​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை

மதுரை மத்திய சிறையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில், ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில், தனித்தனியே இந்த சோதனை நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பொருட்கள், மற்றும் செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக...

ஐஐடி மாணவி தற்கொலை... 3 பேராசிரியர்களிடம் விசாரணை

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் புகாருக்குள்ளான 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த...

புழல் சிறைக்கு மாற்றக்கோரி முருகன் 5வது நாளாக உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தன்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி 5வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 18ஆம் தேதி அவரது அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி சிறைச்...

குழந்தைகள் தினம்- ஒருமணி நேரம் செல்போன்கள் அணைக்கப்பட்டன

குழந்தைகள் தினத்தை ஒட்டி செல்போனை ஒருமணி நேரம் அணைத்து குழந்தைகளுடன் பேசுமாறு பள்ளிக்கல்வித்துறை விடுத்த கோரிக்கைக்கு பெற்றோரிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது. குழந்தைகளுடன் பெற்றோர் மனம் விட்டுப் பேசவேண்டும் என்பதற்காக குழந்தைகள் தினத்தில் பெற்றோர் செல்போனை ஒருமணி நேரம் அணைத்து வைக்குமாறு தமிழக...

பிளாக் மெயில் கும்பலுக்கு ரூ15 லட்சம் கொடுத்தது ஏன் ? திருடனுக்கு தேள் கொட்டிய கதை

சென்னை தியாகராய நகர் சரவணாஸ்டோர்ஸ் எலைட் தங்க நகை கடையில் தரமற்ற தங்க நகை விற்பதாக  கூறி 15 லட்சம் ரூபாயை மிரட்டி பெற்ற கட்டப்பஞ்சாயத்து கும்பல் ஒன்று, மீண்டும் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய போது காவல்துறையினரால் கைது...

வேலூர் சிறையில் உள்ள முருகனை அவரது மனைவி நளினி சந்திக்க அனுமதி

வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க, அவரது மனைவி நளினியை அனுமதிக்க வேண்டும் என சிறை துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் அண்மையில் ப்ளாக்- 1 சிறையில் அண்மையில் சிறைத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில், முருகனின் அறையில் இருந்து செல்போன், கத்தி,...

ஐஐடி மாணவி தற்கொலை... காவல் ஆணையர் நேரில் விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த...

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை தொடங்கி வரும் ஜனவரி 20ம் தேதி வரை அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து 55 பேருந்துக்களும், திருச்சி,...

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை - என்ன நடந்தது என புலன் விசாரணை மூலம் வெளிவரும் - ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அங்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விசாரணை நடத்தினார். மேலும் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள...

பாடகி சுசித்ரா மீட்பு.. குடும்பத்தினரைக் கண்டு அச்சம்?

காணாமல் போனதாகக் கூறப்பட்ட பின்னணி பாடகி சுசித்ரா, சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டார்.  சுச்சி லீக்ஸ் என்ற பெயரில், சினிமா பிரபலங்களின் அந்தரங்கங்கள் வெளியானது. இதன் பின்னணியில் சுசித்ரா இருபபதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அதனை சுசித்ரா மறுத்தார். ஆனால்...