​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செயற்கை முறையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கான மருத்துவச் செலவை மருத்துவமனையே ஏற்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டம்

வேலூர் மாவட்டத்தில் செயற்கை முறையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கான மருத்துவச் செலவை மருத்துவமனையே ஏற்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த மோனிஷா என்பவருக்கு சில நாட்களுக்கு முன், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறை...

கருணாஸ் கைதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம், கருணாஸ் ஆதரவாளர்கள் 55 பேர் கைது

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைதை கண்டித்து, சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட  முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த 55 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை  அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டு,வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கைதை...

பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டதா? அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டதா என  அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெருவோரம் தூங்கிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட இரு குழந்தைகளை கண்டுபிடிக்கக்கோரி எக்ஸனோரா அமைப்பின்...

கருணாசை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு, எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல்

நடிகர் கருணாசை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசியது குறித்த வழக்கில்  கருணாசை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளின் போது சென்னையில்...

சென்னையில் 100 சதவிதம் CCTV கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட யானைக்கவுனி காவல் நிலையம்

சென்னையில் 100 சதவிதம் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட யானைக்கவுனி காவல் நிலையத்தில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். சென்னையில் கண்காணிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் சிசிவிடி கேமராக்களை பொருத்த, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை...

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள்ள் எந்த நிலையில் உள்ளன? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அக்டோபர் 9 ஆம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கு, நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி சுந்தர் அடங்கிய...

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக சபாநாயகர் தனபாலிடம் தகவல் தெரிவித்தது காவல்துறை

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் தகவல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர், காவல்துறையினர் உள்ளிட்டோரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற விதியின்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர்...

ராஜா ரங்குஸ்கி திரைப்பட தயாரிப்பாளர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

ராஜா ரங்குஸ்கி படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த சக்தி வாசன் என்பவர், வாசன் புரடக் ஷன் நிறுகூனம் சார்பில் தயாரித்த ராஜா...

அரசு நிலத்தை மீட்பதில் கடமை தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவை மாவட்டத்தில் அரசு நிலத்தை மீட்பதில் கடமை தவறிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தை அடுத்த இருப்பாநத்தத்தில் பாகப் பிரிவினை செய்யப்பட்ட மூதாதையர் நிலத்துக்கு அரசு புறம்போக்கு நிலம் என்று கூறி வட்டாட்சியர்...

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆகிய இடங்களில்...