​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீராணம் ஏரியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கொள்ளிடம் ஆற்றின் கரை மற்றும் வீராணம் ஏரியில் ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். அம்மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்து, இப்பகுதிகளில் வெள்ளத்தால்...

புதுச்சேரி அரசு நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது கேலிக்கூத்தானது - உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வாதம்

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது கேலிக்கூத்தானது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய...

அரசுபேருந்தில் மதுபாட்டில்களை கடத்திவந்த நடத்துனர், ஓட்டுனர் கைது

காந்திஜெயந்தியை முன்னிட்டு விற்பனை செய்ய மதுபாட்டில்களை கடத்திவந்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரை போலிசார் கைது செய்தனர். இன்று காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையை பயன்படுத்தி விற்பனை செய்வதற்காக காரைக்காலில் அரசு பேருந்தில்...

தமிழகத்தில் திமுக தலைமையிலான வலிமையான அணியில் காங்கிரசும் இடம்பெறும்: ப.சிதம்பரம்

தமிழகத்தில் திமுக தலைமையிலான வலிமையான அணியில் காங்கிரஸ் பங்கு வகிக்கும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை போற்றுவிக்கும் விதமாக "கலைஞருக்கு தோழமை வணக்கம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிதம்பரம்...

என்எல்சி நிர்வாகம் சார்பில் கோயில் குளம் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

சிதம்பரத்தில் உள்ள பழமையான இளமையாக்கினார் கோயில் குளம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் தூர் வாரப்பட்டு வருகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார், தனது மனைவியுடன் இந்த திருக்குளத்தில் நீராடி முதுமை நீங்கியதாக நம்பப்படுகிறது. சிதம்பரம் நகரில் மையத்தில் உள்ள புகழ்பெற்ற...

சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு நுழைவு வாயில் மூடப்படுகிறது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக, கோவிலின் கிழக்கு வாயில், வருகிற 26ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், கிழக்கு கோபுரம் வழியாக கோவிலுக்கு செல்லும் நுழைவாயிலில்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 55 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிதம்பரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் மதுராந்தகநல்லூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற இளைஞர், தீர்த்தம்பாளையம் என்ற கிராமத்திற்கு கொத்தனார் வேலைக்காக சென்றுள்ளார். அப்போது,...

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற விதிகளை மீறி ஒப்புதல் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாகச் சிதம்பரம், அவர் மகன்...

ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற கோட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற கோட்டாட்சியரை, ஆக்கிரமிப்பாளர்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு மிரட்டியதால் பதற்றம் நிலவியது. சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் குமார உடைப்பு வாய்க்கால் கரை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளார். இந்த ஆக்கிரமிப்பை...

சாதிக் கொடுமைகளை சாடிய பாரதியின் இறந்த தினம் இன்று..! அவரை பற்றிய சில தகவல்கள்

இந்திய சுதந்திர தாகத்திற்கு தனது கவிதைகள் மூலம் உரமேற்றிய பாட்டுக்கொரு தலைவன் பாரதி இறந்த தினமான இன்று அவரைப் பற்றிய சில நினைவுகளைப் பார்க்கலாம்.  இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் மகாகவி பாரதி. சாதிகளால் பிளவு பட்டிருந்ததைக் கண்ட இந்த...