​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற விதிகளை மீறி ஒப்புதல் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாகச் சிதம்பரம், அவர் மகன்...

ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற கோட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற கோட்டாட்சியரை, ஆக்கிரமிப்பாளர்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு மிரட்டியதால் பதற்றம் நிலவியது. சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் குமார உடைப்பு வாய்க்கால் கரை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளார். இந்த ஆக்கிரமிப்பை...

சாதிக் கொடுமைகளை சாடிய பாரதியின் இறந்த தினம் இன்று..! அவரை பற்றிய சில தகவல்கள்

இந்திய சுதந்திர தாகத்திற்கு தனது கவிதைகள் மூலம் உரமேற்றிய பாட்டுக்கொரு தலைவன் பாரதி இறந்த தினமான இன்று அவரைப் பற்றிய சில நினைவுகளைப் பார்க்கலாம்.  இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் மகாகவி பாரதி. சாதிகளால் பிளவு பட்டிருந்ததைக் கண்ட இந்த...

பாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு

பாரத் பந்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத நிலையில், ஒரு சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்காததால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில்...

பெட்ரோல்- டீசலுக்கு வரிக்குறைப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.  பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாய் 41 காசுகளுக்கும்,ஒரு லிட்டர் டீசல் 75...

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதம் நடத்த சிறந்த இடம் நாடாளுமன்றமே - ப.சிதம்பரம்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதம் நடத்த சிறந்த இடம் நாடாளுமன்றமே தவிர, நீதிமன்றம் அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கும் 36 ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ்...

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூவர் ஆஜராக உயர்நீதிமன்றம் விலக்கு

வெளிநாட்டு சொத்துக்களை மறைத்ததாக கூறப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் வருகிற 14ஆம் தேதி ஆஜராக விலக்களித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர்...

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 15 லாரிகளை பறிமுதல் செய்தனர் போலீசார்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 15 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார், சிதம்பரம்- சீர்காழி புறவழிச்சாலையில் பொய்யாபிள்ளை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற 15 லாரிகளை...

வேலூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். வேலூரைச் சேர்ந்த வெங்கடேசன் ,குமார், சிதம்பரம் ஆகியோர் வாலாஜாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இன்று...

நாகை அருகே டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகளுடன் பிரபல ரவுடி கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகளுடன் பிரபல ரவுடியை கைது செய்த போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். சீர்காழியை அடுத்த எருக்கூரில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை தடுத்தபோது, அதிலிருந்த இருவர்...