​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரோம்பேட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5 டன் குட்கா பறிமுதல்

தமிழகத்தில் குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சென்னை குரோம்பேட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5 டன் எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீலாங்கரையில் சாலையோரக் கடைகளில் குட்கா விற்பதாக அடையாறு துணை ஆணையர் செஷாங் சாய் தலைமையிலான தனிப்படைக்கு தகவல் கிடைத்தது....

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத்குமாருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில்...

புதுச்சேரியில் குட்கா ஊழல் வழக்கில் மாதவ ராவுக்கு சொந்தமான ரசாயன ஆலையில் போலீசார் விசாரணை

புதுச்சேரியில், குட்கா ஊழல் வழக்கில் மாதவ ராவுக்கு சொந்தமான ரசாயன ஆலையில் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். புதுச்சேரி திருபுவனையில் உள்ள மாதவராவுக்கு சொந்தமான சீனிவாசா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில், கடந்த 2 நாள்களாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்தனர். இதைத் தொடர்ந்து,...

குட்கா ஊழல் வழக்கில், எஸ்.பி. ஜெயக்குமாரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டம் என தகவல்

குட்கா ஊழல் வழக்கில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த ஐந்தாம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையராக...

குட்கா ஊழல் வழக்கில் திட்டமிட்டு தம்மை சிக்க வைத்ததாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் குற்றச்சாட்டு

குட்கா ஊழல் நடந்துள்ளதாக ஒப்புகொண்ட சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், ஆனால் லஞ்ச பணம் கைமாறியதாக கூறப்படும் தேதிகளில் தான் காவல் ஆணையராக இல்லையென்றும், தான் டிஜிபி ஆவதை தடுக்கவே சிக்க வைக்கப்பட்டதாகவும்  குற்றம்சாட்டியுள்ளார்.  குட்கா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை...

குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை துவங்க சி.பி.ஐ தீவிரம்

குட்கா வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்காகக் முறைகேடு நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெயர்ப்பட்டியலை சிபிஐ அதிகாரிகள் பெற்றுள்ளனர். சென்னை செங்குன்றத்தில் உள்ள கிடங்குகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள்...

குட்கா ஊழல் குறித்து CBI விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி,...

சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் பினாமி முறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டு

சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் பினாமி முறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், குட்கா வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதும், முன்னாள் அட்டார்னி ஜெனரல்...

குட்கா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

குட்கா விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் கருத்தை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் கூறப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை...

குட்கா ஊழல் வழக்கில் யார் உடந்தையாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் நீதிபதிகள்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் கூறப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தி.மு.க எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், 2015ம் ஆண்டு எம்.டி.எம். பான்மசாலா நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான...