​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

6 மணி நேரம் காத்திருந்து தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

சுமார் 6 மணி நேரம் காத்திருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ரோமேஷ் சபர்வாலை நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக சுனில்...

டெல்லி சட்டமன்ற தேர்தல்: நேற்று மனுத்தாக்கலை தவறவிட்ட நிலையில் கெஜ்ரிவால் இன்று மனுத்தாக்கல்

நீண்ட நேரம் பேரணி நடத்தியதால் நேற்று வேட்புமனுத்தாக்கலை தவறவிட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீண்ட நேரம் காத்திருந்து மனுத்தாக்கல் செய்தார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணியாக புறப்பட்டு சென்றார். ஆனால் அதிகமான கூட்டத்தால் அவரால் குறிப்பிட்ட...

CAA பற்றி மம்தா, ராகுல், மாயாவதி விவாதிக்க தயாரா..? அமித் ஷா சவால்

எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லக்னோவில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை தம்முடன் நேருக்கு நேராக விவாதிக்க தயாரா...

இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்

தி.மு.க. தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணியளவில் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், கட்சியின்...

ஆந்திரா சட்டப்பேரவையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல்

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அதன்படி அமராவதி...

தடையை மீறி நடைபெற்ற பா.ஜ.க. பேரணியை தடுக்க முயன்ற துணை ஆட்சியரின் தலைமுடியை பிடித்து இழுத்த போராட்டக்காரர்

மத்திய பிரதேசத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேரணி சென்ற பாஜகவினர் மீது, பெண் துணை ஆட்சியர் ஒருவர், தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் நாடு முழுவதும், பரப்புரை இயக்க பேரணிகளை பாஜக...

உணவ திறப்பு விழாவில் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே கைகலப்பு

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் - பா.ஜ.க தொண்டர்களுக்கு இடையே, பெரும் கைகலப்பு ஏற்பட்டது.  போபாலில், உணவகம் ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே, ஏற்பட்ட வாக்குவாதம்,...

வந்தே மாதரம் என முழங்காதவர்கள், இந்தியாவில் வசிக்க உரிமையற்றவர்கள்-மத்திய அமைச்சர்

வந்தே மாதரம் என முழங்க இயலாதவர்கள், இந்தியாவில் வசிப்பதற்கு உரிமையற்றவர்கள் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் 70 ஆண்டுகளுக்கு...

பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் நேரில் ஆஜராக உத்தரவு

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 22ந் தேதி ராகுல் நேரில் ஆஜராக ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மொராதாபாத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல்காந்தி, காவலாளி...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூற முடியாது - கபில்சிபல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று எந்தவொரு மாநிலமும் நிராகரிக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில்சிபல் கூறியுள்ளார். கேரள இலக்கிய விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தைப் பின்பற்ற முடியாது...