​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேறுகால மரண விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை : அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர்

பேறுகால மரண விகிதத்தை குறைக்கும் வகையில், கர்ப்பிணி பெண்களின் இரத்த அழுத்தத்தை கண்டறிவதற்கான, சிறப்பு இயக்கம் முன்னெடுப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்துவைத்தபின் செய்தியாளர்களிடம்...

தினகரன், ரஜினி, கமல் காட்டும் படங்கள் ஓடாது : ஆர்.பி. உதயக்குமார்

டிடிவி தினகரன், ரஜினி, கமல் ஆகியோர் காட்டும் படங்கள், தமிழகத்தில் ஓடாது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கூறியுள்ளார். மதுரை திருமங்கலத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான சமூக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த பின்னர்...

விஐபிகள் பிறந்த அரசு மருத்துவமனை, 175 வயதை தொட்டது..!

கடந்த 30 ஆண்டுகளில் 5 லட்சம் குழந்தைகள் பிறந்த எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை 175 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளது.  நடிகர் விஜய், பிரபல மருத்துவர்கள் என விஐபிக்கள் பலர் ஜனனித்த அரசு மருத்துவமனையின் சிறப்புகள் குறித்து...

7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணியாக இருந்த அங்கன்வாடி சமையலர், சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி அங்கன்வாடி மையத்தில் சமையலராக உள்ளவர் தனலட்சுமி. 7 மாத கர்ப்பிணியான தனலட்சுமி,...

பெண் பயணியை காலால் எட்டி உதைத்த பேருந்து ஓட்டுனர்

ஈரோட்டில் பெண் பயணி ஒருவரை அரசு பேருந்து ஓட்டுனர் காலால் எட்டி உதைத்ததாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் தனது உறவினரான கர்ப்பிணி பெண்ணை உடன் அழைத்துக்கொண்டு ஈரோடு நகரப் பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பெண் இறங்குவதற்கு...

காட்டு யானைகள் தாக்கியதால் வசிப்பிடத்தை இழந்த பெண்

ஒடிசாவில் காட்டு யானைகள் தாக்கியதால் வீட்டை இழந்த பெண் கால்வாய் பாலத்திற்கு அடியில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய சுருபில் கிராமத்தில், அந்த பெண் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன் காட்டுயானைகள் தாக்கியதால் வீட்டினை இழந்த அந்த...

ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டதால் வலியுடன் அழைத்துவரப்பட்ட கர்ப்பிணிப் பெண் வேதனை

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அரசு ஆரம்பசுகாதார நிலையம் மூடப்பட்டதால் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்டோர் தவிக்கும் நிலை ஏற்பட்டது. குருவராஜபேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு, செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி பெண்ணான தேசம்மாள் வலியுடன் ஆட்டோவில் அழைத்துவரப்பட்டார். ஆனால்...

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்க வகைசெய்யும் அரசாணையை திரும்பப் பெறக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தை காவல் அதிகாரி எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண்  உஷா உயிரிழந்ததை மேற்கோள்...

கயவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கண்டிப்பாக சத்தியம் செய்கிறேன்- கமல்ஹாசன்

அரசியலில் தான் விலை போகமாட்டேன் என்றும், கயவர்களுடன் கூட்டணி இல்லை என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். திருச்சி சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பணி பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். மக்கள்...

திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்

கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் காவல் ஆய்வாளர் காமராஜை பிடிக்க விரட்டினர். ஆனால் காமராஜ்...