​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று...

நீலகிரியில் தொடரும் மண்சரிவு அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு அந்த மாவட்டத்தில் கனமழை தொடரும் என்பதால் மேலும் 238 இடங்களில் மண் சரியும் அபாயம் உருவாகி உள்ளது. கடந்த ஒரு ஒருவாரமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும்...

கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 333 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. தமிழகத்தின் 2-வது பெரிய அணையான பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8...

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..

தமிழகத்தில் அடுத்து மூன்று தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், 21, 22 ஆம் தேதிகளில் அனேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,...

தமிழகத்தின் பல இடங்களில் கனமழை

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடித்து வருகிறது. சென்னை நகரில் 3 வது நாளாக நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை அருகே உள்ள...

டெல்லியில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 க்கு விற்பனை

டெல்லியில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் தக்காளி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, இமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து பிறப்பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் கர்நாடகா மற்றும் மராட்டியம்...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 34ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரத்து 722 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு...

நடப்பு ஆண்டில் 5ஆவது முறையாக முழு கொள்ளவை எட்டிய பில்லூர் அணை - வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை மாவட்டம் பில்லூர் அணை நடப்பு ஆண்டில் 5ஆவது முறையாக முழு கொள்ளவை எட்டி உள்ளது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால்...

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் வடகிழக்குப் பருவமழை

தமிழகத்தில் பொள்ளாச்சியில் நேற்று 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்றிரவு 7 மணி அளவில் தொடங்கிய மழை தொடர்ந்து 5மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் பல்வேறு பகுதிகளில்...

சென்னையில் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு மிக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இன்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, கடந்த16ம் தேதி துவங்கியதை...