​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குஜராத் மாநிலத்தில் சேதமடைந்த ஆற்றுப்பாலத்தை பெரியவர்களின் துணையுடன் கடக்கும் மாணவர்கள்

குஜராத் மாநிலத்தில் 2 மாதங்களுக்கு முன் சேதமடைந்த ஆற்றுப்பாலம் சீர்செய்யப்படாததால், பள்ளி மாணவர்கள் ஆபத்தான வகையில் பாலத்தை கடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கெடா மாவட்டத்தின் நைகா-பெராய் கிராமங்களுக்கு இடையே ஆற்றுப்பாலம் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன் உடைந்துவிழுந்த இந்த பாலத்தை சீர்செய்ய...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.. ஒரே நாளில் 3 அடி உயர்வு..

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.  காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. இதே போல்...

கனமழையால் தீவுகள் போல் காட்சியளிக்கும் மும்பை, ரயில்வே பிளாட்பாரங்களை வெள்ளம் சூழ்ந்ததால் படகுகள் மூலம் பயணிகள் மீட்பு

மும்பையில் இடைவிடாது பெய்யும் மழையால் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. மின்சார ரயில்கள் ஆங்காங்கே நின்று விட்டதால்...

காவிரியில் நீர்திறப்பு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடகாவில் தொடரும் கனமழையால் உபரி நீர் பெருக்கெடுப்பதால்,  வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி  நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது.  அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே...

தாய்லாந்தில் குகையில் சிக்கியோர் மீட்பு

தாய்லாந்து நாட்டில் பத்து கிலோ மீட்டர் நீளமுள்ள குகைக்குள் சிக்கித் தவித்த சிறுவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க 100 பேர் கொண்ட குழுவினர் ஹாலிவுட் படத்தில் வருவதை போல திட்டம் தீட்டி திறம் பட செயல்பட்ட விதம் உலகம்...

சேலம் சுற்றுப்பகுதியில் அரை மணி நேரம் நீடித்த கனமழை

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்த மழை விவசாயிகளையும் பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அம்மாப்பேட்டை, கூட்டாத்துப்பட்டி, பேளூர்  உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி...

கூடலூரில் பெய்யும் மழையால் இதமான சூழல்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசேலென காட்சி அளிக்கிறது. கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. சாலைகளில் லேசாக...

4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய சிறுவாணி அணை

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கன மழை காரணமாக சிறுவாணி அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நிர்மட்டம் அணையின் மொத்த உயரமான 50 அடி உயரத்தை நெருங்கியுள்ளதையடுத்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. சிறுவாணி அணைதான் கோவையின் 36...

மழையால் நிரம்பி வழிகிறது கபினி அணை, உபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரியில் தண்ணீர் அளவு அதிகரிப்பு

தொடரும் கனமழையால் உபரி நீர் பெருக்கெடுப்பதால்,  வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் திறப்பு தவிர்க்க முடியாததாகியுள்ள நிலையில், ஜூலை மாதத்திற்கான நீரைத் திறக்க கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை நாடு முழுக்க...

வால்பாறையில் தொடரும் மழை - அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது. வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி பருவமழை பெய்துவருகிறது. எஸ்டேட் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பிர்லா...