​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்..! வாகன ஓட்டி மீது தாக்குதல்

ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு மனைவியுடன் சுற்றுலா சென்ற இளைஞரிடம் வாகன நிறுத்தத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்டு பஞ்சாயத்து தலைவரின் ஆதரவாளர்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், 9 மாவட்டங்கள் நீங்கலாக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தாலும் முடிந்தது...

உள்ளாட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு இன்று மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்  இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

குடியுரிமை திருத்த சட்டம்: காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை

குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்  விவாதிப்பதற்காக காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திமுக பங்கேற்கவில்லை.   குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் டெல்லியில்...

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல்...

ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி..

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் பல ஊர்களில் கடும் போட்டி நிலவுகிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் உள்ள...

புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் துவங்கியதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல்

புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையரை பணிகள் துவங்கியுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மூன்று மாத காலம் மட்டுமே, உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது....

மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்வதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து...

பல மாவட்டங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு

தமிழ்நாட்டில், பல மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் முழுவதுமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரையில் வாக்கு எண்ணிக்கை 100 சதவிகிதம் நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், 23 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக 12இல் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக 9...

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை - உயர்நீதிமன்றம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியே தேர்தல் நடத்தப்படுகிறது. முதலில் ஊரக உள்ளாட்சிகளுக்கு...