​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் இன்று பிரேத பரிசோதனை

சென்னை கே.கே.நகரில் நேற்று கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல்  பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது. சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரது தந்தை மோகன் இறந்து விட்டதால் தாயார் சங்கரியின் பராமரிப்பில் இருந்தார். கே.கே.நகரில் உள்ள...

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி மாணவி கொலை

சென்னை கே.கே.நகரில் பட்டப்பகலில் கல்லூரி அருகிலேயே மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.. கொலையாளியை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.  சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரது தந்தை மோகன் இறந்து விட்டதால் தாயார் சங்கரியின் பராமரிப்பில்...

திரிபுரா முன்னால் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கட்சி அலுவலகத்தில் உள்ள ஒரே ஒரு அறையில் மனைவியுடன் குடியேறினார்

திரிபுராவில் முதலமைச்சராக 20 ஆண்டுகள் ஆட்சி செய்த மாணிக் சர்க்கார், தற்போது கட்சி அலுவலகத்தில் ஒரே ஒரு அறை கொண்ட பகுதியில் மனைவியுடன் குடியேறியுள்ளார். பா.ஜ.க. வெற்றி பெற்றதும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய மாணிக் சர்க்கார் மறுநாளே அரசு வீட்டில் இருந்து...

திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்

கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் காவல் ஆய்வாளர் காமராஜை பிடிக்க விரட்டினர். ஆனால் காமராஜ்...

திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி போராட்டம்

கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி, உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்...

செய்யாற்றுப் படுகையில் இரவு பகலாக மணல் திருட்டு - மணல் திருடிச் சென்ற லாரி மோதியதில் ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் திருடிச் சென்ற லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ஆரணியை அடுத்த ராந்தம் கொல்லைமேடு பகுதியில் உள்ள செய்யாற்று படுகையில் உரிய அனுமதியின்றி இரவு பகலாக மணல் திருடப்படுகிறது. மணல் திருடிச் செல்லும்...

ரவுடிகளின் மிரட்டல் மற்றும் உயர் அதிகாரிகளின் நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் - சதீஷ்குமாரின் உறவினர்கள்

ரவுடிகளின் மிரட்டல் மற்றும் உயர் அதிகாரிகளின் நெருக்கடியே உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தற்கொலைக்கு காரணம் என அவரது உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்....

தாராபுரத்தில் விதைபண்ணை தொழிலாளி காயங்களுடன் சடலமாக மீட்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விதை பண்ணைக்குள் கலாஸ் தொழிலாளி பழனிச்சாமி என்பவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆச்சியூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர்,  பழனிரோட்டில் உள்ள ஆதவன் விதை பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் விதைபண்ணையின்...

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் மருத்துவமனையை அடித்து உடைத்த உறவினர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். வாலாஜாபாத் நேரு நகரைச் சேர்ந்த அருண்குமார் என்ற 27 வயது இளைஞர் நெஞ்சுவலி காரணமாக ஏ.பி.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த...

ஈராக்கில் சதாம் உசேன் குடும்பத்தினர் உள்ளிட்டோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு

ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் உசேன் குடும்பத்தினர், அவர் ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய அதிகாரிகள் என நாலாயிரத்துக்கு மேற்பட்டோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஈராக்கின் அதிபராக இருந்த சதாம் உசேன் 2003ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கில் ஊடுருவித் தாக்குதல் நடத்தியதை...