​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 3 மாதங்களுக்குள் இறுதிசெய்யப்படும் - மத்திய அரசு தகவல்

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 3 மாதங்களுக்குள் இறுதிசெய்யப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இடைநிலை ஊடகமாக செயல்படுவதால் பயனாளர்கள் பரிமாறும் விஷயங்களை  ஒழுங்குபடுத்த முடியாது என்றும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை கூறி வருகின்றன. வெறுப்பு...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம்...

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை தொடரும்

மும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் ஆனால் வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 2 ஆயிரத்து 700...

பிறரை சொல்லும் முன் தான் ஹெல்மெட் அணிய வேண்டும் - நாராயணசாமி பதிலடி

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனப் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இருசக்கர...

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனப் பிரச்சாரம் என புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை - கிரண்பேடி

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனப் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி...

அனல் பறக்கும் இறுதிகட்ட பிரச்சாரம்..!

நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை ஒன்றியத்தில் சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா...

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் சொலிசிட்டர்...

கேரளாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி விவகாரம் - சென்னையில் கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்தில் சோதனை

கேரளாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மோசடி செய்து விற்பனை செய்த விவகாரத்தில், சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்தில் கேரள போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவில் கொச்சி அருகே, மரடு பஞ்சாயத்து பகுதியில் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை...

பிரதீக் ஹலேஜாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தலைவர் பிரதீக் ஹலேஜாவை மத்தியப் பிரதேசத்துக்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பில் காணப்படும் தவறுகள் தொடர்பாக ஹலேஜா மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. முஸ்லிம் அமைப்பு சார்பில், ஹலேஜா பாகுபாடு...

அயோத்தி வழக்கில் தீர்ப்பு குறித்து 5 நீதிபதிகள் அமர்வு ரகசிய ஆலோசனை

அயோத்தி ராம ஜன்ம பூமி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளும் நேற்று உச்சநீதிமன்ற வளாகத்தில் தனியறையில் ரகசிய ஆலோசனை நடத்தினர். அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விசாரணையை முடித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது....