Advertisement

RKநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 95வழக்குகள் பதிவு

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 95வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 15பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கடந்த மாதம் 24ஆம் தேதியில் இருந்து இதுவரை 83வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களின் பேரில் 95வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக 15பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக 120பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 30லட்சத்து 29ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன