Advertisement

எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் – தமிழக வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தான் படையினர் எல்லைக்கு அப்பாலிருந்து நடத்திய தாக்குதலில், ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழக வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீரில் ஆர்.எஸ்.புரா எல்லைப்பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமைக் காவலர் சுரேஷ் உயிரிழந்தார்.

தமிழக வீரரான சுரேஷ் 1995ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். இவருக்கு 13வயதில் ஒரு மகளும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மற்றொரு வீரரும் ஊர்மக்கள் மூவரும் காயமடைந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன