​​
Polimer News
Polimer News Tamil.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட MLA'க்கள் 11 பேரை தகுதி நீக்கம் கோரிய வழக்கு, இன்று பிற்பகல் தீர்பு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2017 ஆம் ஆண்டு...

சென்னையில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னையில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், செங்கோட்டையன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறையை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நான்கு...

சட்டிஸ்கரில் 20 பெண்கள் உள்பட 60 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரண்

சட்டிஸ்கரில் 20 பெண்கள் உள்பட 60 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரண் அடைந்தனர். நாராயணபுர் மாவட்டத்தில் பாஸ்தர் எனுமிடத்தில் தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை ஒப்படைத்த நக்சலைட்டுகள் ஒட்டு மொத்தமாக சரண் அடைந்தனர். மாவோயிஸ கொள்கை மீது நம்பிக்கை இழந்து...

சீன அதிபருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் மோடி

சீனா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு அதிபர் சீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சீனா சென்றடைந்தார். வுஹான் நகரில் பிரதமர் மோடி தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்றிரவு...

மூன்று நாள் பயணமாக சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். வுஹான் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அதிகாரபூர்வமற்ற முறையில் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.  இந்தச் சந்திப்பில்...

உடலை விட்டு பிரிக்கப்பட்ட மூளையை உயிர்ப்புடன் வைக்கும் ஆய்வு

பன்றிகளின் மூளை குறித்து சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு, உயிரிழந்த பின்பும் பல நாட்களுக்கு மனித மூளையை உயிர்ப்போடு வைக்கும் முறையைக் கண்டறிய வழிவகுத்துள்ளது. உயிரிழந்த சுமார் 100 பன்றிகளின் உடலிலிருந்து தனியே எடுக்கப்பட்ட மூளைகளுக்கு ஆக்சிஜன் நிறைந்த செயற்கை ரத்தம் பாய்ச்சி...

தமிழகத்துக்கு வரும் திட்டங்கள் அனைத்தும் அழிவுத்திட்டங்கள் - வைகோ

நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும், தமிழகத்தை அழிக்கவே உருவாக்கப்படுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக, வியாழனன்று ஸ்ரீவைகுண்டத்தில் பிரச்சாரம் செய்த...

தமிழகம் - கேரளம் இடையேயான நதிநீர்ச் சிக்கல்கள், மே1 டெல்லியில் மத்திய அரசு தலைமையில் முத்தரப்புப் பேச்சு

தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ச் சிக்கல்கள் குறித்து, டெல்லியில் மே 1 ஆம் தேதி மத்திய அரசின் தலைமையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரு மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருப்பதாக மத்திய நீர்வள...

பெண்கள் விடுதியில் அத்துமீறி வீடியோ... துணை நடிகர் கைது..!

சென்னையில் பெண்கள் விடுதியின் ஜன்னல் வழியாக செல்போனில் பெண்களை படம் பிடித்த துணை நடிகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்  சென்னை 28 உள்ளிட்ட படங்களில் கூட்டத்தில் ஒருவராக முகம் காட்டியவர் நடிகர் வைரமூர்த்தி. நாகை மாவட்டம் மேலக்காடு எனும் ஊரை சேர்ந்த...

சிறையில் போட்ட ஆட்டம் ஜெயிலர் இடமாற்றம்..!

புழல் மத்திய சிறையில் ஜெயிலராக இருந்த ஜெயராமன், கைதியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆதாரத்துடன் சிக்கிய பிறகும் கூட நடவடிக்கைக்கு உள்ளாகாமல் தப்பி வந்த நிலையில் மதுரை மத்திய சிறைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் சென்னையை அடுத்துள்ள புழல் மத்திய சிறையின், விசாரணைக்...