​​
Polimer News
Polimer News Tamil.

சென்னையில் இரு இடங்களில் கூவத்தில் இருந்து 2 சடலங்கள் மீட்பு

சென்னை சேத்துப்பட்டில் கூவம் கரையோரம் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்ட நிலையில், கஞ்சா விற்பனை தகராறில் கொலை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலைக்கு பின்பகுதியில் உள்ள கூவம் ஆற்று கரையோரம் கழுத்து, தலைப் பகுதிகளில் வெட்டுக் காயங்களோடு...

மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடப் பணிகளுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடப் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. நினைவிடம் கட்ட விதிமுறைகளுக்கு மாறாக தமிழக கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 14-ஆம் தேதி பொதுப்பணித்துறை அனுமதி கோரிய நிலையில்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பேசுவதாக மாணவர்களுக்கு வலைவீசும் தனியார் கல்லூரிகள்..!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் செல்பேசிக்குச் சில தனியார் கல்லூரிகள் தொடர்புகொண்டு கலந்தாய்வுக்கான பயனாளர் அடையாளம், கடவுச்சொல் ஆகியவற்றைக் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புக் கலந்தாய்வுக்காக ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் ஒரு...

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பெங்களூரில் இன்று ஆலோசனை

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பெங்களூரில் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் பங்கேற்கும் உறுப்பினர் பட்டியலை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இதில் கர்நாடக அரசின் நீர்வளத்துறை நிர்வாகச்...

தென் தமிழக பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழக பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக...

சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்குத் தண்ணீர்

சென்னையின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பும் பணிகள் மீண்டு தொடங்கியுள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வழக்கமாக...

டி.டி.வி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்க துறையிடம் உள்ள ஆவணங்களை வழங்க உத்தரவு

டி.டி.வி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்க துறையிடம் உள்ள ஆவணங்களை அவருக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இங்கிலாந்தின் பார்க்லே வங்கிமூலம் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் டாலர் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக தினகரன் மீது...

ஆன்ட்டிஹீரோ படங்கள் போல் பிரபலம் அடையும் தமிழ் ராக்கர்ஸ்-வாகை சந்திரசேகர்

ஆன்ட்டிஹீரோ ((Anti-hero)) படங்கள் போல் மக்கள் மத்தியில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பிரபலம் அடைந்து வருவதாக திமுக உறுப்பினர் வாகை சந்திரசேகர் சட்டப்பேரவையில் கூறினார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேரவையில் பேசிய அவர், தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம், தமிழ்...

மருத்துவமனைகளில் விரைவில் 1,500 மருத்துவர்கள் நியமனம் : விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் விரைவில் 1,500 மருத்துவர்கள் மற்றும் 4 ஆயிரம் செவிலியர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என திமுக உறுப்பினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர்...

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு

கேரள மாநிலம் இடுக்கியில் முழு அடைப்பு நடைபெற்று வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அம்மாநில அரசின், நிலமில்லாதோருக்கு நிலம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை முன்னிட்டு...