​​
Polimer News
Polimer News Tamil.

70 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை

இங்கிலாந்தின் மான்செஸ்ட்ர் விமான நிலைய பகுதியில் வீசிய பலத்த காற்றினால், அடுத்தடுத்து 6 விமானங்கள் தரையிறங்க முடியாது தவித்த நிலையில், வேறு விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன. லண்டன் ஹீத்ரு, காட்விக் போன்று மிகவும் பிசியான விமான நிலையங்களில் ஒன்று, மான்செஸ்டர் விமான நிலையம்......

வங்கிகளின் நிதிநிலைமை குறித்து மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று முக்கிய ஆலோசனை

மத்திய இடைக்கால  பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில், பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்துகிறார். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மேலாண் இயக்குநர்கள்...

ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், இளைஞர் கைது

திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை பேருந்தில் கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் 2 டிராவல் பேக்- உடன் வந்தவரை...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ரயில் இன்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு ரயில் “உத்தரதேவி” கொழும்பிலிருந்து இன்று காலையில் தனது பயணத்தைத் தொடங்கியது. பின்னர் பிற்பகல் 2.40 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இந்த...

மக்களவைத் தேர்தலுக்காக மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா - திருநாவுக்கரசர்

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாகவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ...

இந்து பெண்ணை தொட்டால், அந்த கை இருக்க கூடாது என மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேச்சால் சர்ச்சை

இந்து பெண்ணை எவராவது தொட்டால், அவரின் கை இருக்க கூடாது என்று மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருக்கும் அனந்த்குமார் ஹெக்டே, கர்நாடக மாநில குடகு மாவட்டத்தில் நடைபெற்ற...

கோயில் திருவிழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அறந்தாங்கி அருகே செவிடங்காடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் விழா நடந்தது. இதற்காக 50 அடி உயரம் கொண்ட நாட்டுமரம் கோயில் முன்பாக...

மக்கள் கண்டு ரசித்த பாரம்பரியமான ஸ்லெட்ஜ் போட்டிகள்

ஜெர்மனியில் நடைபெற்ற வருடாந்திர ஸ்லெட்ஜ் வண்டிச் சறுக்கு போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர். குறுகலான வளைவுகள் கொண்ட பனி நிறைந்த வனப்பகுதியில் ஸ்லெட்ஜ் எனப்படும் பனிச்சறுக்கு வண்டிப் பந்தயம் நடந்தது. வளைவுகளில் திரும்பும்போதும், மேடு பள்ளங்களைக் கடக்கும் போதும் அந்த வண்டியில் பயணித்தவர்கள்...

கூத்தாடி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதாட்டம்

சேலம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக கொண்டப்பட்டன. ஓமலூரை அடுத்த செட்டிபட்டியில் கூத்தாடிமாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமாக நடத்தப்படும் எருதாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று காளைகளை ஓடவிட்டு, அதற்கு இணையாக ஓடி வந்து...

இஸ்ரேலிடமிருந்து ஹாரப் ட்ரோன்களை வாங்கத் திட்டம்

எதிரி நாட்டு இலக்குகளையும், ராணுவ வாகனங்களையும் அழிக்கும் ட்ரோன் விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்குவதற்கு இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. அண்டை நாட்டுடன் நடக்கும் போரின் போது மனித இழப்புகளைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான ஹாரப் ((HAROP))  ரக ட்ரோன்களை 15 என்ற...