​​
Polimer News
Polimer News Tamil.

ஜாம்பியா அதிபர் எட்கர் சாக்வா லுங்குவை பிரதமர் மோடி சந்தித்தார்

இந்தியா வந்துள்ள ஜாம்பியா அதிபர் எட்கர் சாக்வா லுங்குவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். 3 நாள் அரசு முறை பயணமாக ஜாம்பியா அதிபர் எட்கர் சாக்வா லுங்கு இந்தியா வந்துள்ளார். அவரை இன்று டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி...

வீட்டு மேற்கூரையில் பதுங்கி இருந்த 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு

தாய்லாந்தில், வீட்டின் மேற்கூரையில் சுற்றியிருந்த 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர் சாமர்த்தியமாக மீட்டு செல்லும் காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில், பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரை உத்திரம் அருகே மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாகவும், அதனை...

சாரைப் பாம்பும், நல்ல பாம்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் சாரைப் பாம்பும், நல்ல பாம்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனமாடிய காட்சி காண்போரை கவர்ந்தது. பெண்ணாடம் ரயில் நிலையம் அருகே உள்ள வயல் வெளியில் இன்று காலை சாரைப் பாம்பு மற்றும் நல்ல பாம்பு ஒன்றுடன் ஒன்று இணைந்து...

"2023 தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் குடிசை இல்லாத தமிழ்நாடு"

வருகிற 2023ஆம் ஆண்டுக்குள் குடிசையே இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு எட்டப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வடசென்னையில், சூளை, புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை துணை முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர்...

ப.சிதம்பரம் மீது அரசியல் காழ்ப்புணர்வோடு நடவடிக்கைகள் - ஸ்டாலின்

காஷ்மீர் விவகாரத்தில் வீட்டு சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்க கோரி திட்டமிட்டபடி டெல்லியில் நாளை கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.ஆர் பாலு தலைமையிலான ஆர்பாட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் இந்திய...

பெண் குழந்தைகள்... முதலமைச்சர் வேண்டுகோள்..!

பெண் குழந்தைகள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், டீன் ஏஜ்., அலைபாயும் வயது என்பதால், இந்த வயதில் சரியான வழியில் சிந்தித்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். ஈரோடு அடுத்துள்ள திண்டல் பகுதியில், வேளாளர் மகளிர் கல்லூரியின்...

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஜெயக்குமார்

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வர்களுக்கான ஒருநாள் ஊக்க முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம்...

பாரமுல்லாவில் தீவிரவாதிகள் - பாதுகாப்புப் படை இடையே சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில், தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் உடனான சண்டையில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாரமுல்லா மாவட்டம் ஃகனி ஹமாம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து,...

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பார்லே பிஸ்கட் நிறுவனம் முடிவு?

நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, 10,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்லே ஜி, மொனாகோ, மிலானோ, ஹைட் அண்ட் சீக் (Parle-G, Monaco, Milano, Hide and Seek) ஆகிய பிஸ்கட்டுகளை தயாரிக்கும்...

கடல் மணலை நினைவு பொருளாக எடுத்துச் சென்றவர்களுக்கு அபராதம்

இத்தாலியில் கடற்கரை மணலை நினைவுப்பொருளாக எடுத்துச் சென்ற 2 சுற்றுலா பயணிகள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.  சர்தீனிய கடற்கரைகளில் இருந்து மணல், கூழாங்கற்கள் மற்றும் கிளிஞ்சல்களை எடுத்துச் செல்வதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்தீனியாவின் தெற்கு பகுதியான...