​​
Polimer News
Polimer News Tamil.

உதவி எண் 104-ல் மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு : விஜயபாஸ்கர்

தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சுகாதாரத்துறை உதவி எண்ணான 104-ல் தொடர்பு கொண்டால், மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுவர்களின் பிறவிக்குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில்...

சென்னையில் துப்பாக்கி முனையில் வியாபாரிகளை கடத்தி ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் வழிப்பறி

சென்னையில் அதிகாரிகள் போல் நடித்து துணி வியாபாரிகளை துப்பாக்கி முனையில் காருடன் கடத்திச் சென்று 16 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த நூதன கொள்ளை சம்பவத்தில், இலங்கை...

மத்திய அரசுடன் மாநில அரசு அரசியல் ரீதியான நல்லுறவை வைத்துள்ளது- அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய அரசிடம் மாநில அரசு அரசியல் ரீதியான நல்லுறவையே வைத்திருப்பதாகவும் கட்சி ரீதியான உறவு அல்ல என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பாஜகவுடன் இணைய வேண்டும் என்ற மத்திய...

பெங்களூருவில் Heli-Taxi எனும் ஹெலிகாப்டர் சேவை நாளை முதல் தொடக்கம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை திங்கள் முதல் தொடங்கவுள்ளது. தும்பி ஏவியேசன் என்ற நிறுவனம் திங்கள் முதல் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனேகல்லில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டிக்கு முதற்கட்டமாக ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை வழங்குகிறது....

திருப்பூர் சந்தையில் விற்பனையாகும் சாயம் தூவிய பூக்கள்

திருப்பூர் மலர்ச் சந்தையில்,  சாயம் பூசிய பூக்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூர் டவுனில் அமைந்துள்ள பூச்சந்தையில் அண்மைக்காலமாக, வெள்ளை நிற பூக்களின் மீது பல வண்ண சாயங்களை தூவி விற்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்...

சேதமடைந்த மின்கம்பத்தை அதிகாரிகள் சரிசெய்யாததால் மரக்கம்புகளைக் கொண்டு சரிசெய்த பொதுமக்கள்

இராமநாதபுரம் அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்யாததால் பொதுமக்களே மரக்கம்புகளைக் கொண்டு சரிசெய்துள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்துள்ள செவ்வூர் கிராமத்தில்...

பற்பசைவடிவில் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 3 பேர் கைது

சென்னையில் பற்பசைவடிவில் தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்டதையடுத்து வேறு வடிவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. சென்னை சவுகார் பேட்டைக்குட்பட்ட பகுதிகளில் பற்பசைவடிவில்...

புதை வட கம்பிகள் மூலம் மின்சார விநியோக கட்டமைப்பு- அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில், புதை வட கம்பிகள் மூலம் மின்சார விநியோக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நகராட்சிகள் அளவில் முதல் முறையாக குமாரபாளையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற...

2019 ஜனவரி முதல் சர்வதேச விமான சேவை- ஏர்ஏசியா விமான நிறுவனத்தின் இந்தியப் பிரிவு திட்டம்

வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் சர்வதேச விமான சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஏர்ஏசியா விமான நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் விமானப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் நாக்பூர் மற்றும் இந்தூரை புதியதாக தமது சேவை...

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்

ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பை எப்போது நடத்துவது என்பது குறித்து அவரிடம் பேச்சு நடத்தி வருவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை போயஸ்...