​​
Polimer News
Polimer News Tamil.

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் இந்திய வெளியீடு ஒத்திவைப்பு

புதிய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தின் இந்திய வெளியீடு ஏப்ரல் மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நோ டைம் டு டை ((No Time To Die)) என பெயரிடப்பட்டுள்ள படத்தில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் 5ஆவது முறையாக டேனியல் கிரேக் ((Daniel Craig))  நடித்துள்ளார். அப்படம்...

கங்குலியை முந்தி கோலி சாதனை..!

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலியை கேப்டன் விராட் கோலி முந்தி சாதனை படைத்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதன் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய...

"வீறு நடை போட்ட சிறுவன்" வாழ்கையை மாற்றிய மனித நேயம்

கயிறு கொடுங்கள் சாக வேண்டும் என்று கதறி அழுத 9 வயது சிறுவனை ஆயிரக்கணக்காக ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கெத்தாக ரக்பி லீக் மைதானத்தில் வீறு நடை போட வைத்த நிகழ்வு, மனித நேயமே ஆகச் சிறந்தது என்பதை ஒரு முறை...

இந்தியா வருகிறார் டிரம்ப்... வரலாறு காணாத பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தருவதால், அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் அகமதாபாத் விமான நிலையத்துக்கு...

விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு திட்டப்படியே ராமர் கோயில்

விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு முன்வைத்த திட்டத்தின்படியே அயோத்தி ராமர் கோயில் கட்டப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொது செயலாளர் சம்பத் ராய் ((Champat Rai)) 30 ஆண்டுகளுக்கு...

நடிகை விஜயலட்சுமி முன்வைத்துவரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க சீமான் மறுப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற போது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராக செல்லும் போது மட்டும் கெட்டு விடுமா என நடிகர் ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அக்கட்சியின்...

வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி மாணவர்கள் மோசடி செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி மாணவர்கள் மோசடி செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். தனியார் வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்திற்குச் சென்ற ஒரு பெண் உட்பட நான்கு பேர், தங்களை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும்...

மாணவியர் விடுதியில் ஒருநாள்... கையும் களவுமாக பிடிபட்ட மாணவன்

ஆந்திர மாநிலத்தில் ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதியில் ஒரு மாணவியின் அறையில் நாள் முழுதும் தங்கியிருந்த மாணவனை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுஸிவிடு ((Nuzividu)) நகரத்தில் உள்ள அரசு ஐ.ஐ.ஐ.டி.யில் சுமார் 6000...

SRM பல்கலை.,யில் பஞ்சாப் மாணவி தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த ஆஷாராணா என்பவர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் தங்கியிருந்த...

நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள் 7 பேர் உயிரிழப்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரான் எல்லையையொட்டிய தென்கிழக்கு துருக்கியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள்...