​​
Polimer News
Polimer News Tamil.

மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 600 மீனவர்கள் மீது வழக்கு

புதுச்சேரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரு கிராமங்களிலிருந்தும் 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நல்லவாடு, வீராம்பட்டிணம் கிராம மீனவர்களிடையே சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில் திங்களன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது...

ரூ.90 லட்சத்தை எடுக்க முடியாமல் உயிரிழந்த பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்

மும்பையில் உள்ள பி.எம்.சி. வங்கியில் தனது பெயரில் உள்ள 90 லட்சம் ரூபாயை எடுக்க முடியாமல் போராடிய ஜெட் ஏர்வேசின் முன்னாள் ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார். பி.எம்.சி. என சுருங்க அழைக்கப்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் 6,500 கோடி ரூபாய் கடன்...

பொருளாதாரத்தை அழித்து விடுவோம் - துருக்கியை மிரட்டும் அமெரிக்கா

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி அரசு மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அழிக்கப்போவதாக சூளுரைத்துள்ளார்.   சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்து இனப் போராளிகள் மீது துருக்கி ராணுவம்...

பொதுத்துறை வங்கி மேலாண் இயக்குனர்களுடன் ஆர்.பி.ஐ ஆளுநர் இன்று ஆலோசனை

நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களை, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மும்பையில்,...

5 மாத குழந்தையுடன் வீட்டில் இருந்த தம்பதி கொடூர கொலை

நாமக்கல்லில் வீடு புகுந்து இளம் தம்பதியை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பழ வியாபாரம் செய்து வந்த விமல் ராஜ் என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வீசாணத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணை...

டாஸ்மாக் பாரில் தகராறு - 2 பேர் வெட்டிக் கொலை

சென்னை பள்ளிக்கரணை அருகே டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறில்  2பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.  சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் இரவு...

காருக்குள் வால்நட் கொட்டைகளை மறைத்து வைத்த அணில்

அமெரிக்காவில் அணில் ஒன்று நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. பென்சில்வேனியா மகாணத்தில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை வீட்டின் பின்புறம் உள்ள வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தனர். சிலநாட்கள் கழித்து...

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் - கரூர், பழனி - கோயம்புத்தூர், பொள்ளாச்சி - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. கரூரிலிருந்து பகல் 11.40க்கு புறப்படும் ரயில் சேலத்திற்கு மதியம் 1.25 மணியளவில்...

தமிழ் சினிமாவில் களம் காணும் இர்பான் பதான், ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதானும், ஹர்பஜன் சிங்கும் தமிழ் சினிமாவில் களம் காணவுள்ளனர். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார். அதில், இந்திய அணியின்...

தாய்க்கு பிரிட்ஜ் வாங்க 35 கிலோ எடையுடைய சில்லறையை எடுத்துச் சென்ற மகன்

ராஜஸ்தானைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவன் தனது தாய்க்கு பிறந்தநாள் பரிசாக 12 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமித்த சில்லறை காசுகளை வைத்து பிரிட்ஜ் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளான். ஜோத்பூர் அருகே உள்ள சஹரன் நகரைச் சேர்ந்தவர் பப்பு தேவி....