Advertisement
Advertisement

Maruti Suzuki – Toyota நிறுவனம் இணைந்து தயாரிக்கும் மின்சார கார்

இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து மாருதி சுசூகி நிறுவனம் தயாரிக்கும் மின்சார காரின் ஆரம்ப விலை 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மின்சார கார்களை அறிமுகப்படுத்த மாருதி சுசூகி மோட்டார் நிறுவனமும், டொயோட்டா மோட்டார் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி வாகனங்களை தயாரிக்கும் பொறுப்பை மாருதி சுசூகி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க டெயோட்டா நிறுவனம் முன்வந்துள்ளது. இரு நிறுவனங்களும் மின்சார கார் உற்பத்தியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், விலையை நிர்ணயம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் தற்போது விற்பனையாகும் சிறிய ரக பெட்ரோல் கார்களின் விலை 4 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் நிலையில், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் மின்சார கார்களை உற்பத்தி செய்ய முடியுமா என ஆலோசித்து வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன