Advertisement

Make in India திட்டத்தை முடுக்கிவிட மத்திய அரசு முடிவு

வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை, முக்கியத்துறைகளை மேம்படுத்தும் வகையில் முடுக்கி விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், அதற்கு வாய்ப்புள்ள முக்கியமான துறைகளைத் தேர்வு செய்து அவற்றை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி, தோல் பதனிடுதல், ஜவுளி உற்பத்தி, ஆயத்த ஆடை தயாரிப்பு, பொறியியல், ஆட்டோ மொபைல் மற்றும் மருந்துத் துறைகள் மீது கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. அண்மையில் நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் இதற்கான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 25 துறைகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன