தொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்

0 647

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில எல்லைகள், விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுவரை ரத்த மாதிரி எடுக்கப்பட்ட 42 பேருக்கும் கொரானா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கொரானா வைரஸ் பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments