காதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

0 433

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்த அருண் குமார் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததால், ஏற்கனவே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் அருண்குமார்.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கல்லூரி மாணவியிடம் மீண்டும் காதலை தெரிவித்த அருண்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு மாணவி மறுக்கவே உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 60 சதவீத தீக்காயங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments