மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதிலிருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து - மு.க.ஸ்டாலின்

0 299

மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், மத்திய அமைச்சர்களும், மத்திய அரசை அனைத்து வகைகளிலும் கட்டுப்படுத்தும் சங்பரிவாரங்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக, தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பல்வேறு குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் - சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தமது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது !

BC/MBC/SC/ST இடஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல்- சமூகநீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
https:/t.co/X4yS7RpXHD

— M.K.Stalin (@mkstalin) February 10, 2020 ">

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments